‘நான் மிகவும் விரும்பும் தமிழ் தொடரில் மீண்டும் நடிக்கிறேன்’ – 12 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் பூஜா. எந்த சேனலில் தெரியுமா ?

0
624
pooja
- Advertisement -

சின்னத்திரையில் எவ்வளவோ வில்லிகள் வந்தாலும் ஒரு சில பேரு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் 13 வருடங்களுக்கு முன்னாடி சீரியலில் வில்லியாக நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பூஜா. இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் தமிழ் சீரியலுக்கு பிரேக் கொடுத்து விட்டார். ஆனால், அவர் என்னவானார் எங்கு இருகிறார் என்பதே தெரியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பூஜா பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியது,

-விளம்பரம்-

14 வயதில் நான் மீடியாவில் நுழைந்தேன். எங்கள் குடும்பத்தில் இருக்கிற நிறைய பேர் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கும் நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தது. சீரியல்களில் என்னை வில்லியாகவே பார்த்திருப்பார்கள். நிஜத்தில் நான் பயங்கர ஜாலி பர்சன். யார்கிட்டேயும் சண்டைப் போடுறது பிடிக்காது. என் தாத்தாவும் பாட்டியும் கன்னட மொழியில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட். அதனால், எனக்குள்ளும் நடிப்பு ஆசை இருந்தது. ஆரம்பத்தில் நான் கன்னடத்தில் நிறைய படங்களிலும் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.

- Advertisement -

சீரியல் நடிகை பூஜா அளித்த பேட்டி:

அதைப் பார்த்து தான் ‘குங்குமம்’ என்ற மெகா சீரியலில் நடிக்க குஷ்பு மேடம் கூப்பிட்டாங்க. அப்படித்தான் சிங்கார சென்னைக்கு வந்தேன். தமிழ் சீரியலில் பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களே கிடைத்தது. என் முகத்துக்கும் நெகட்டிவ் கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது. என் நடிப்பைப் பார்த்துட்டு வெளியிலிருந்து நிறைய திட்டு வந்தாலும், அது எனர்ஜியைத் தான் கொடுத்தது. அது தானே நம் நடிப்புக்குக் உண்மையான விருது.

பூஜா செய்யும் வேலைகள்:

நான் நடித்துட்டு இருந்தப்பவே காஸ்டியூம் டிசைனிங் மேலே ஆர்வமாக இருந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் சீரியலில் எனக்கான காஸ்டியூமை நானே டிசைன் பண்ணிக்க ஆரம்பித்தேன். இப்போ நானே புரொடியூஸ் பண்ற நிகழ்ச்சியில் எல்லா ஆர்ட்டிஸ்டுக்கும் நான் தான் காஸ்டியூம் டிசைன் பண்றேன். இப்போ, நான் ஃபேமிலியோடு பெங்களூரில் செம ஹேப்பியா இருக்கேன். ZEE கன்னடால ஸ்டைலிஸ்ட் கன்சல்டன்ட்டா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இப்பவும் என்னைச் சந்திக்கும் தமிழ் ரசிகர்கள் ப்ளீஸ், மறுபடியும் நடிக்க வாங்க என்று அன்பு மழையில் நனைக்கிறாங்க.

-விளம்பரம்-

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பூஜா:

அந்த அன்புக்காகவே மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன். அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கூறிஇருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மீரா என்ற தொடரின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் குஷ்பூ நடிக்கிறார். மேலும், இந்த சீரியல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு பலரும் ஆதரவாக கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் பூஜா தான் நடிக்கும் மீரா சீரியல் குறித்தும் குஷ்பு குறித்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

பூஜா பதிவிட்ட பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, மீண்டும் கேமராவிற்கு முன்பாக வருகிறேன். நான் மிகவும் விரும்பும் தமிழ் தொடரில் மீண்டும் நடிக்கிறேன். அதற்காக குஷ்புவிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 7 ஆண்டுகளில் பழைய விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், அந்த மாற்றத்தை படிப்படியாய் என்ஜாய் செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக நீங்கள் என்னை வெறுப்பீர்கள் என்று பதிவிட்டிருக்கிறா.ர் இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவரின் ரீ என்ட்ரியை எதிர்பார்த்து சீரியல் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement