அந்தரங்க வீடியோ கால் செய்ய இத்தனை லட்சமா ? தனக்கு வந்த மெசேஜ் அனுப்பிய நபர் குறித்து சன் டிவி சீரியல் நடிகை.

0
771
- Advertisement -

தமிழ் சீரியல்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் பிரபலமானது சன்.டி.வி. இந்த டிவியில் பல ஆண்டுகளாக காலை முதல் இரவு வரையில் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பாகிறது அந்த வகையில் கடந்த வருடம் தொடங்கிய சீரியல் தான் “ஆனந்தராகம்”. இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இந்த சீரியல் நடித்துவரும் நடிகை ரீஹானா தனக்கு நடந்த மோசமான ஒரு நிகழ்வை பற்றி பேசியிருக்கிறார். இவர் ஏற்கனவே சன்டிவியில் ஒளிபரப்பாகிய பல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

நடிகை ரீஹானா பொதுவாகவே சில சர்ச்சையான விஷியங்களை மிகவும் வெளிப்படையாக பேசுவார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறினார். அவர் கூறியது “நடிகை ரேகா நாயருக்கு பின்னர் என்னைத்தான் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கின்றனர். அவர் என்னுடைய தோழிதான், நானும் அவரும் எதிர்த்தமான விஷியங்களை தான் பேசுவோம். திரையின் முன்பு அதிகமாக நடிப்பதினால் வாழ்க்கையில் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது.

- Advertisement -

அதனால் தான் நாங்கள் எதிர்த்தமாக பேசினோம். அதனை சர்ச்சையாக மாற்றுவார்கள் என்று தெரியாது. நாங்கள் சில நேர்காணல்களில் கூறியதை வைத்து எங்களை குறைவாக பேசுகின்றனர். நான் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு மட்டும் தான் தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது. கதாநாயகனாக சினிமாவில் நடிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையில் கதாநாயகன்கள் கிடையாது. அதே போல தான் வில்லன்களுக்கு நிஜ வாழ்க்கையில் வில்லன்கள் கிடையாது. என்பதனை நான் தெரிந்து கொண்டேன்.

ஆண்கள் என்றால் சிலர் உணர்வு பூர்வமாக பேசி மயக்குவார்கள், சிலர் பணம் கொடுத்து கூப்பிடுவார்கள். அப்படி அந்த விஷியத்தில் ஏமாற்றப்படும் பெண்களின் முடிவு அவர்களுடையது. அருணாவ் விவகாரத்தில் என்னை பலர் குறை கூறினார்கள். அவருடைய ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் என்னிடம் பல கொச்சனையான வார்த்தைகளை கொண்டு பேசினார்கள். நீ மட்டும் நல்லவரா? நீ மட்டும் பத்தினியா? என்று அவர்கள் எனக்கு பிச்சை போடுவது போல பேசுகின்றனர்.

-விளம்பரம்-

சிலர் அவருடைய ரசிகர்கள் என்று கூறி மிகவும் கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என்று கூறினார். மேலும் பேசிய அவர் பெண்களுக்கு சோசியல் மீடியாக்களினால் ஏற்படும் பிரச்னை குறித்து பேசினார். அப்போது தாங்கள் நடிகைகள் என்றும் அதனால் ப்ரொபைல் பிச்சரில் தங்களுடைய புகைப்படத்தை வைக்கிறோம் ஆனால் பெண்கள் அப்படி செய்ய வேண்டாம். சோசியல் மீடியாக்கள் மூலமாக பல விதமான சர்ச்சையான விஷியங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று கூறிய அவர் தனக்கு நடந்த விஷயம் குறித்து பேசினார்.

அதாவது தனக்கு ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்ததாகவும் அந்த மெசேஜில் நிர்வாண வீடியோ எடுத்து அனுப்பு என்றும், சில பாகங்களை வீடியோ எடுத்து அனுப்பு என்றும், சில கேவமான செயல்களை செய்து அனுப்பு என்றும், அப்படி செய்தால் 15லட்சம் ரூபாய் தருகிறேன், அக்கவுண்ட் நம்பரை அனுப்பு என்று அந்த நபர் தெரிவித்தாராம். இந்நிலையில் இந்த நபரை சிக்க வைக்கும் பொருட்டு உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினாராம் ரீஹானா. ஆனால் அந்த நபர் இன்னமும் சிக்கவில்லை என்று தெரிவித்தார் நடிகை ரீஹானா.

Advertisement