இதற்காக தான் சீரியலில் இருந்து விலகி இருந்தேன் – அண்ணியாரே கூறிய காரணம்

0
622
- Advertisement -

தமிழில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் ‘தெய்வமகள்’. இந்தத் தொடர் குடும்பப் பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அண்ணியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண கலாய் கலாய்த்தனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. மலையாளத்தில் ‘சேச்சி அம்மா’ என்ற சீரியல் மூலம் முதன்முறையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. தான் நடித்த முதல் தொடரிலேயே இவர் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல சீரியல்களில் நடித்திருக்கிறார் ரேகா. தமிழில் ‘பாரிஜாதம்’ என்ற தொடரின் மூலம்தான் அறிமுகமானார்.

- Advertisement -

ரேகா கிருஷ்ணப்பா நடித்த சீரியல்கள்:

இப்படி பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழ் கொடுத்தது ‘தெய்வமகள் சீரியல்’ தான். அதன் பின் மாயமோகினி, நீலி, நந்தினி, திருமகள், தமிழும் சரஸ்வதியும் என பல தொடர்களில் நடித்தார். அது மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தன் கணவரோடு கலந்து கொண்டார் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. சமீபத்தில் தனது திரைப்பயணம் குறித்து நடிகை ரேகா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

ரேகா கிருஷ்ணப்பா பேட்டி:

அதில், நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நிறைய பட வாய்ப்புகள் எனக்கு வந்தது. ஆனால் அந்த சமயத்தில் சீரியல் போதும் என்று நான் நினைத்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு சீரியல் களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. அதனால் நான் சீரியலில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பிறகு மூன்று வருடங்களாக சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினேன். அந்த நேரத்தில் நான் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தேன். இப்போது மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தவற விட்ட வாய்ப்பு குறித்து:

மேலும், நான் தவறவிட்ட வாய்ப்புகள் என்றால் நிறைய இருக்கிறது. ரீசெண்டா நான் ரெண்டு தமிழ் படம் மிஸ் பண்ணி இருக்கிறேன். அதில் ஒன்று பிரபுதேவா உடைய படம். டேட்ஸ் பிரச்சினையால நான் அதை தவற விட்டுட்டேன். அப்போ சீரியல்ல நடிச்சிட்டு இருந்தனால என்னால அந்த படத்தில் நடக்க முடியல. அதுக்கப்புறம் அந்த சீரியலில் நடிப்பதை நான் நிறுத்தி விட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணதை நினைத்து நிறைய வருத்தப்படுவேன் என்று கூறியுள்ளார்.

ரேகா கிருஷ்ணப்பா குறித்து:

இவர் 1985 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். இவரின் சொந்த ஊர் கர்நாடகமே ஆகும். இவருக்கு ஒரு சகோதரனும், மூன்று சகோதரிகளும் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் பெங்களூரு கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டம் பெற்றவர். சில வருடங்களுக்கு முன்பு வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட கொண்டார். அண்ணியாருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement