குதிரையுடன் போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகை – பீதி கிளப்பிய குதிரை. வைரல் வீடியோ.

0
604
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் ராஜா ராணி, அரண்மனை கிளி,மௌன ராகம், பாரதிகண்ணம்மா, சிவா மனசுல சக்தி என்று திரைப்பட டைட்டில்களை வைத்து ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியடைந்தது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த சின்னதம்பி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 442 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான தொடராக திகழ்ந்து வந்தது.

-விளம்பரம்-

ப்ரஜின் மற்றும் பவானி ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரீமா அசோக். இந்த தொடர் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலத்தை பெற்ற இவர் முதன் முதலில் சீரியல் நடிகையாக அறிமுகமானது கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘களத்து வீடு’ என்ற தொடர் மூலம் தான். இந்த தொடரை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, ரெக்கை கட்டி பறக்குது மனசு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் ரீமா.

- Advertisement -

மதுரையை பூர்விகமாக கொண்ட இவருக்கு 19 வயது தான் ஆகிறது. மேலும், தனது 16 வயதிலேயே கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்திருந்தார். மேலும், இவர் சிறு வயதிலேயே நடனத்தை கற்றுத்தேர்ந்தவர். இதனால் ஒரு சில நடன நிகழ்ச்சிகளும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக நடனமாடி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-5.png

-விளம்பரம்-

இப்படி சின்னத் திரையில் கலக்கிகொண்டு வரும் ரீமா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன்மகள் வந்தால் ‘ தொடரில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரீமா அடிஅக்டி போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் குதிரையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்த இருந்தார் அப்போது இவருக்கு அருகில் நின்று போஸ் கொடுத்தபோது வரை திமிரி அவர் பதறிப்போய் கொஞ்சம் தள்ளி நின்று விட்டார்

Advertisement