பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் ரித்திகா. மீடியாவுக்கு முன் இவர் குடும்ப கஷ்டத்தால் தான் நடிக்க வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘ராஜா ராணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார் ரித்திகா. அதன் பின்னர் இவர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று பல சீரியல்களில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான் பாக்கியலட்சுமி சீரியலால் தான். இந்த பாக்கியலட்சுமி சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். மேலும், இவர் தொகுப்பாளனி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என நிகழ்ச்சியில் கலக்கி இருந்தார். அதோடு ரித்திகா 4ஜி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.
ரித்திகா குறித்த தகவல் :
குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரித்திகாவுக்கு ஒரு பெரிய புகழை தேடி தந்தது என்றே கூறலாம். மேலும், இவர் youtube சேனலையும் நடத்தி வருகிறார். இதற்கிடையில் கடந்த 2022-ம் ஆண்டு ரித்திகா தமிழ்ச்செல்வி விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் விஜய்’டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு, ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது.
ரித்திகா திருமணம்:
இருவரும் விஜய் டிவியில் பணியாற்றிய நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேரளா முறைப்படி எளிமையாக நடந்தது. பின் திருமணம் வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார். தனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார் ரித்திகா.
சோசியல் மீடியாவில் ரித்திகா:
திருமணத்திற்குப் பின்னும் இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்திருந்தார். பின் திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கு காரணம் என்னவென்று தான் தெரியவில்லை. இருந்தாலுமே, ரித்திகா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ரித்திகா அறிவித்திருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் பலருமே அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
பிரக்னன்சி போட்டோ ஷூட்:
இந்த நிலையில் ரித்திகா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் தன் கணவருடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம், வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.