ஏன்டா இத பண்ணலன்னு ஒரு நாள் வருத்தப்படுவார் – தன் குழந்தை குறித்து கமன்ட் செய்தவர்களுக்கு சமீரா பதிலடி.

0
776
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர் சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்

-விளம்பரம்-

விக்னேஷ் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. அதன் பின்னர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஜோடியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்கள். அன்வர்– சமீரா அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.

- Advertisement -

ரியல் காதலர்களாக இருந்த அன்வர்– சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட். பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார். கடந்த சில மாதங்களாக சமீரா கர்ப்பமாக இருந்து வந்தார்.

கர்ப்பமாக இருந்த போது தனக்கு வந்த பல நெகடிவ் கமண்டுகளுக்கு பதில் அளித்து கொண்டு தான் இருந்தார் சமீரா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. சமீபத்தில் யூடுயூப் பக்கத்தில் தன் குழந்தையுடன் Vlog ஒன்றை போட்டு இருந்தார். அந்த விடீயோவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், . கேமராவிற்கு முன்னர் பால் கொடுக்க வேண்டாம். பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது என்று கமன்ட் செய்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்த சமீரா ‘பால் கொடுப்பதை ஒரு சாதாரண விஷயமாக ஏன் பார்க்க மாற்றீங்க. அது எப்படி அருவருப்பா இருக்கும். அது ஒரு சின்ன குழந்தையின் உணவு, உங்கள் எண்ணம் தான் அருவருப்பாக இருக்கும், உங்களை பார்த்து பாவப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.‘ அதே போல இன்னோருவர் ‘குழந்தையை தலையில் கை வைத்து தூக்குங்கள்’ என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு ஒரு நெட்டிசன் ‘அதுக்காக அவர் வருத்தப்படும் வரை அதை அவர் செய்ய மாட்டார்’ என்று கமன்ட் செய்து இருக்கிறார்.

Advertisement