சின்மயின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் வரலக்ஷ்மி, சமந்தமற்றும் நடிகர் சித்தார்த் போன்றவர்களும் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் #METOO -ல் பிரபல சீரியல் நடிகை சான்ரா ஒரு சீரியல் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "தலையணை" பூக்கள் என்ற நாடகத்தில் நடித்துவந்தேன்.அந்த நாடகத்தில் ஸ்ரீ ராம் என்பவர் முதலில் நடித்து வந்தார்.பின்னர் அவருக்கு பதிலாக பிரகாஷ் ராஜன் என்ற நபர் நடித்து வந்தார். அவர் எப்போது பெண்களை பற்றி மிகவும் கொச்சையாக கேலி செய்து கொண்டே இருப்பார், அதனால் அவருடன் நான் தள்ளியே இருந்தேன்.
பிரகாஷ்:
ஒரு முறை பிரகாஷ் என்னிடம் கொஞ்சம் மோசமாக பேசினார் அதனால் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தயரிப்பாளர் ரவி என்பவரிடம் புகார் அளித்தேன். ஆனால், எனக்காக அவனை ஒரு முறை மன்னித்து விடு என்று சமாதானம் செய்தார். பின்னர் ஒரு நாள் நான் படப்பிடிப்பில் இருந்த போது பிரகாஷ் எனது மார்பகத்தை பற்றியும், இடுப்பை பற்றியும் மிகவும் கொச்சையாக விமர்சித்து சிரித்தான்.
எனக்கு அங்கேயே அழுகை வந்துவிட்டது அன்று படப்பிடிப்பு முடிந்ததும் நான் மீண்டும் பிரகாஷ் மீது புகார் அளித்தேன். அப்போது தயரிப்பாளர் பிரகாஷிடம் கேட்ட போது மற்ற பெண்கள் எல்லாம் அமைதியாக தானே இருகாங்க இவளுக்கு மட்டும் என்ன என்று கூறினார். அதன் பின்னர் நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மீண்டும் அழைப்பு வந்தது ஆனால், நான் மிகவும் புண்பட்ட மனதுடன் அந்த சீரியலில் இருந்து விலகினேன் என்று பதிவிட்டுள்ளார் சான்ரா.@Chinmayi Kudoos to ths brave heart.. Lots of love hugs nd support #MeToo pic.twitter.com/15izJltIhR
— sandra amy prajin (@sandra_amyy) October 10, 2018





