இணையத்தில் வைரலான ‘வாத்தியார்’ மீம்ஸ் குறித்து பசுபதி போட்ட பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
15733
pasu
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-
 ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடம்பெறும் காட்சி தொடர்பான டெம்ப்லேட் இணையத்தில் படாத பாடு படுகின்றது. வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்... எனும் வரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் நான் சுகர் பெசன்ட்டுடா விட்டுடுங்கடா என வாத்தியாரை கதற விட்டு விட்டனர். இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பார்த்து சத்தமாக சிரித்து மகிழவும்.

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதில் பசுபதி ஒரு தீவிர தி மு க தொண்டராக நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் பேச்சுலர் பார்ட்டி – தோழிகளுடன் நீச்சல் உடையில் கூத்தடித்து வித்யு லேகா (ஸ்லிம் ஆனாலே இப்படி தானா)

- Advertisement -

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது. இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை தைரியமாக தேர்வு செய்துள்ள பசுபதிக்கு பல பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாக இவரது டெம்ப்லேட் தான் மீம் கிரியேட்டர்கள் வச்சி செய்து வருகின்றனர்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இடம்பெறும் பசுபதி தொடர்பான காட்சியின் டெம்ப்லேட் இணையத்தில் படாத பாடு படுகின்றது. வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்… எனும் வரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் பல விதமான மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், அணைத்து வாத்தியார் மீம்களையும் பார்த்து பயங்கரமான சிரித்தேன்,. உங்கள் அளவு கடந்த அன்பிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement