52 வருசத்துல வெறும் இந்தனை பெண்கள் மட்டும் தான் இந்த விருத பெற்றிருக்காங்க, சீரியல் நடிகை சரண்யா கேள்வி.

0
790
saranya
- Advertisement -

தாதா சாகேப் பால்கே விருது விருது வழங்குவதில் பெண்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்வது ஏன் என்று விஜய் டிவி சீரியல் நடிகையான சரண்யாகேள்வி எழுப்பியுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர் பல பேர் இருக்கின்றனர், அதில் சரண்யாவும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சி, புதிய தலைமுறை என்று பல தொலைக்காட்சியில் பணியற்றிய சரண்யா பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகையானார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது. தற்போது அம்மணி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு நடிகர் கமல் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததை விமர்சித்து உள்ளார்.

இதையும் பாருங்க : ஒரு மகள் அப்பா முகம் , ஒரு மகள் அம்மா முகம் – முதல் முறையாக வெளியான பிரஜன் – சாண்ட்ரா Twins மகள்களின் புகைப்படம்.

- Advertisement -

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் ரஜினியின் திரைத்துறை நண்பரும் நடிகரும் மக்கள் நீதி மைய்ம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று கூறியிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-10-577x1024.jpg

கமலின் இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரண்யா, இதுக்கு வாழ்த்து சொல்லாமலே இருக்கலாமே என்று பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமல் தனது ட்விட்டர் பதிவில் திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்ற வரியை குறிப்பிட்டு தான் சரண்யா இந்த பதிவை போட்டுள்ளார் என்று தோன்றுகிறது.

-விளம்பரம்-

அதே போல கடந்த 21 ஆண்டுகளாக எந்த பெண்ணுக்கும் இந்த விருது ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ள சரண்யா, கடந்த 52 ஆண்டுகளில் வெறும் 6 பெண்கள் மட்டும் தான் இந்த தாதா சாகிப் பால்கே விருதை பெற்றுள்ளனர். இறுதியாக வாங்கிய பெண் ஆஷா போன்ஸ்லி, 21 ஆண்டுக்கு முன். ஏன் இந்த பாரபட்சம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement