பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு சர்ஜரி செய்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா துராடி திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார்.
பின்னர் இவர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார். அதனை அடுத்து இவர் ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்திலும் நடித்து இருந்தார். பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். ஆனால், சினிமாவில் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
சரண்யா குறித்த தகவல்:
பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரன்’ தொடரில் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் ‘ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்தார். திடீரென சீரியலில் இருந்து சரண்யா விலகி விட்டார். அதனை அடுத்து கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார். பின் இவர் ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் நடித்தார். ஆனால், இந்த சீரியலை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம்’ இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார்.
சீரியல் கதை:
ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். மேலும், இந்தத் தொடரில் சரண்யாவின் கதாபாத்திரம் வில்லி மாதிரி காண்பித்து வருகிறார்கள்.
சரண்யா புகைப்படம்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை சரண்யா துராடி பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, நடிகர் சரண்யாவுக்கு காலில் அடிபட்டு இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு சர்ஜரி நடந்திருக்கிறது. தற்போது இவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், நீங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து பிரேக் எடுத்து இருக்கிறீர்களா? விலகி விட்டீர்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.