இதனால் தான் நிறைய சினிமா வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறேன் – சீரியல் நடிகை ஸ்ரீ துர்காவை ஞாபகம் இருக்கா ?

0
1063
Shreedurga
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ துர்கா. இவர் பல வருடங்களாக சின்னத்திரை தொடர்களில் நடித்து இருக்கிறார். சிறுவயதில் இருந்தே சினிமா, சீரியலில் எனது இரண்டிலுமே துர்கா நடித்திருக்கிறார். இவர் மாடலிங் துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் பாசிடிவ் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் கௌதம் என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இவர் நடித்த உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு, அலைகள், சிகரம் போன்ற பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் ஜெயா டிவி, கேப்டன் டிவியில் கூட சில தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றையும் தயாரித்து வழங்கி இருந்தார்.

- Advertisement -

ஸ்ரீதுர்கா நடித்த நெகட்டிவ் ரோல்:

பெரும்பாலும் பாசிட்டீவ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதுர்கா அவர்கள் ஊஞ்சல் சீரியலில் தான் முதன்முதலாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் இரண்டாம் பாதியில் இவர் தவறை உணர்ந்து திருந்தி வாழும் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். எப்போதுமே நகைச்சுவை கதாபாத்திரம் தான் ஸ்ரீதுர்காவுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஸ்ரீதுர்கா குறித்த தகவல்:

மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது தான் அவருக்கு பிடிக்குமாம். ஆனால், அந்த மாதிரி கதாபாத்திரங்கள் நிறைய கிடைக்கவில்லை என பல இடங்களில் கூறியிருக்கிறார். இனி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்தார் ஸ்ரீதுர்கா. மேலும், இவர் நடிப்பைத் தவிர சங்கீதத்திலும் அதிக ஆர்வம் உண்டு.

-விளம்பரம்-

ஸ்ரீதுர்கா அளித்த பேட்டி:

ஏன்னா, இவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பமே சங்கீதக் குடும்பம் என்று சொல்லலாம். இதனால் ஸ்ரீதுர்கா முறையாக சங்கீதம் பயின்றவர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீதுர்கா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் ஐந்து வயதிலிருந்தே மீடியா துறையில் இருக்கிறேன். மாடலிங் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.

தவறவிட்ட சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

அதற்குப்பின் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே பணியாற்றி இருக்கிறேன். அப்போது பல சினிமா வாய்ப்புகளை தவற விட்டு இருக்கிறேன். பல படங்களில் நடிக்கும் கதாபாத்திரம், பட வேலைகள் எல்லாமே ஆரம்பிக்கப்பட்டு ஏதோ சில காரணங்களால் தடைப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரி பல சினிமா வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement