தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். மேலும், வலிமை படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள்.
படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை படம் குறித்து ஸ்ரீநிதி கூறியது:
மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை. படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் ஸ்ரீநிதியை இன்ஸ்டாகிராமில் வறுத்து எடுத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
வீடியோவில் 4 : 17 நிமிடத்தில் பார்க்கவும்
தகாத வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்:
அதுமட்டுமில்லாமல் சிலர் தவறான வார்த்தைகளால் ஸ்ரீநிதியை திட்டி இருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த ஸ்ரீநிதி லைவ் வீடியோ பேசி இருக்கிறார். அதில் அவர், நான் காசு கொடுத்து படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என சொல்ல கருத்து சுதந்திரம் இல்லையா? நான் விஜய் ரசிகை என்பதால் தான் இப்படி சொன்னேன் என சொல்கிறார்கள். ஆனால், நான் உண்மையில் சிம்பு ரசிகை. அஜித்தை பற்றி நான் தவறாக எதுவுமே பேசவில்லை. படத்தைப் பற்றி தானே கூறினேன். நான் எந்த தவறுமே செய்யவில்லை. நான் ஜாலியாக தான் பைக் ஓடுகிறது என்று சொன்ன கருத்தை இவ்வளவு சீரியஸாக மாறும் என நினைக்கவில்லை.
கற்பழிப்பு மிரட்டல் விடுத்த ரசிகர்கள்:
நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. நான் மன்னிப்பு எல்லாம் கேட்கவும் முடியாது என்று கூறி கமெண்டில் தன்னை தகாத வார்த்தைகளால் சொல்லியிருந்த வார்த்தைகளை ஸ்ரீநிதி சொல்லி அழுது இருந்தார். இருந்தும் சோசியல் மீடியாவில் ஸ்ரீநிதியை மட்டும் இல்லாமல் அவருடைய குடும்பத்தையும் கேவலமாக பேசி திட்டி வருகிறார்கள். அதிலும் சிலர் பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னை கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும் என்றெல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் இப்படி ரசிகர்கள் திட்டி வரும் விமர்சனம் குறித்து ஸ்ரீநிதி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், அஜித் ரசிகர்கள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் கேவலமாக பேசி திட்டுகிறார்கள்.
ஸ்ரீநிதி அளித்த பேட்டி:
இதனால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டேன். நாட்டில் எவ்வளவோ கொலைக் குற்றங்களை செய்தவர்கள் எல்லாம் நிம்மதியாக வெளியில் திரிகிறார்கள். நான் எந்த தவறுமே செய்யவில்லை. இருந்தும் என்னை இப்படி தகாத வார்த்தைகளால் பேசி இருக்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு படத்தைப் பற்றிய கருத்தை கூறுவதால் நான் கர்ப்பமாக வேண்டுமா? இதை கேட்டால் என் அப்பா என்ன நினைப்பார்? அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக கருத்து சொல்லிவிட்டு ஒரு படத்தைப் பற்றி கருத்தை கூறியதற்கு கற்பழிப்பு மிரட்டல்? இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.