தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

வலிமை படத்திற்கு விமர்சனம் சொல்லி அஜித் ரசிகர்களால் படாத பாடு பட்ட ஸ்ரீநிதி சமீபத்தில் சிம்பு குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஒருநாள் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு ரசிகர் ’நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என கேள்வி எழுப்பிய போது அதற்கு ’செய்துகொள்ளலாம் தான், நல்ல ஐடியா தான், ஆனால் எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறதே’ என்று பதில் அளித்து இருந்தார்.
சிம்பு குறித்து ஸ்ரீநிதி :
திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்,மேலும் அந்த பதிவில் ,என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க,லேட்டா தான் புரிஞ்சது,இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று கூறி இருந்தார்.

சிம்பு என்ன என்ன டார்ச்சர் பண்றாரு :
அதே போல ஸ்ரீநிதியின் இந்த பதிவை கண்டு பல யூடுயூப் சேனல்கள், ஸ்ரீநிதி, சிம்புவை காதலிக்கிறார் என்று செய்தியை வெளியிட்டுள்ளனர். அதை கண்டு அவரின் தந்தை ஸ்ரீநிதிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீநிதி 'நான் சிம்புவை காதலிக்கவில்லை அப்பா. சிம்பு தான் என்ன லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தானே' என்று பதில் அனுப்பி இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இருக்கிறார்.
சிம்புவை போய் கேளுங்க :
மேலும், அதில் குறிப்பிட்டுள்ள 'என்னிடம் Str குறித்து கேட்பதற்கு பதிலாக ஏன் நீங்கள் அனைவரும் என்னை பற்றி அவரரிடம் கேட்கமாற்றீங்க. நான் பொய் சொல்லவில்லை. சமூக வலைதளத்தில் தான் நான் உண்மையாக இருக்கிறேன். அவரை பற்றி எந்த பேட்டியையையும் நான் கொடுக்க மாட்டேன். அவரே கொடுக்கட்டும். என்னை விட்டுவிட்டு அவரை கேளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியான நட்சத்திராவைப் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை தற்போது நீக்கியும் உள்ளார் ஸ்ரீநிதி.
https://www.youtube.com/watch?v=UeLnA2nHMuE
ஸ்ரீநிதி குறித்து ஸ்ரீநிதி :
அதில் 'நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது, நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோழியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசிய ஸ்ரீநிதிக்கு மனநலம் முற்றிவிட்டது என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். '





