“மெட்டி ஒலி” சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரித்திகா. திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன “நாதஸ்வரம்” சீரியல் மூலம் தான் நடிகை ஸ்ரித்திகா மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் மூலம் நடிகை ஸ்ரிதிகா தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் கல்யானபரிசு, அழகு ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து உள்ளார். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி நாதஸ்வரம் புகழ் நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சநீஸ் என்பவருடன் வெற்றிகரமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரித்திகா திருமணம் அரேஞ்ச் மேரேஜ் ஆக இருந்தாலும் இவர்கள் இருவர் இடையே உணர்ந்த காதல் தருணங்களை பற்றி பேட்டியில் வெட்கப் புன்னகையுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரித்திகா. அதில் அவர் கூறியது, என்னுடைய அக்கா கணவரின் நண்பர் தான் சநீஷ். சநீஷுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணலாம் என்று வீட்டில் பேச்சை ஆரம்பித்தார்கள். முதலில் எங்கள் இருவரையும் பேசி பார்க்க சொன்னார்கள். பிடித்திருந்தால் திருமணத்தைப் பற்றி பேசலாம் என்று சொன்னார்கள்.
இதையும் பாருங்க : அந்த படத்த எடுத்துப்பாரு கேஸ் போடுறேன். தனுஷை எச்சரித்த இயக்குனர் விசு.
நாங்களும் பேச ஆரம்பித்தோம். இரண்டாவது முறை அவர்கிட்ட நான் பேசும் போது மனசுக்குள் ஒருவிதமான உணர்வு ஏற்பட்டது. அவருக்கும் அப்படித் தான் ஏற்பட்டதாம். ஒரு நாள் எனக்கு துபாயில் சூட்டிங் இருந்தது. சநீஷ் அவர்களும் துபாயில் தான் இருக்கிறார். அதனால் அவரை நான் துபாயில் மீட் பண்ணினேன். இரண்டு நாள் வெளியே சுற்றிப் பார்க்க சென்றோம், நிறைய பேசுனோம், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். போனில் பேசிக் கொண்டதை விட ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்து பேசும் போது நன்றாக இருந்தது. அவருக்கு என்னுடைய துறையை பற்றி எதுவுமே தெரியாது. அதனால் என்னுடைய வேலையை பற்றி அவருக்கு தெளிவாக சொன்னேன். அவரும் அவருடைய வேலையை பற்றி எனக்குச் சொன்னார்.
நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ரொமான்ஸ் எல்லாம் எதுவுமில்லை. புதுசா முதன் முதலாக அறிமுகம் ஆனவர்கள் எப்படி பேசிக் கொள்வார்களோ அப்படித் தான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டாம். அந்த நேரத்தில் தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. நான் பொதுவாகவே ரொம்ப வளவளன்னு பேசமாட்டேன், நண்பர்களுடன் வெளியில் எங்கும் போகமாட்டேன். அவரும் என்னை மாதிரி பார்ட்டி கோயிங் கேரக்டர் கிடையாதுன்னு எனக்கு தெரிய வந்தது. அந்த நேரத்துல தான் எனக்கு சநீஷ் மேல காதல் வந்தது. காதல் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. அது ஒரு நொடியில் ஏற்படும். அதற்கு பிறகு தான் நாங்கள் வீட்டில் சொல்லி எங்களுடைய திருமணம் நடந்து முடிந்தது என்று வெட்கத்துடன் கூறினார்.