விஜய் டிவி சீரியல் வில்லி நடிகை ஸ்ரேயாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்- மாப்பிளை யார் தெரியுமா?

0
27
- Advertisement -

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல் நடிகர், நடிகைகள் தங்களுடன் நடித்த நடிகர் நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து திருமணம் செய்தியை வெளியிட்டே வருகிறார்கள்.

-விளம்பரம்-

சில மாதங்களுக்கு முன்பு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் நடிகர் வசந்துக்கும், பொன்னி சீரியல் நடிகர் வைஷ்ணவிக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. இவர்களைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த சங்கீதா திருமணம் நடந்தது.

- Advertisement -

பிரபலங்கள் திருமணம்:

இவர் அரவிந்த் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். சங்கீதா ஏற்கனவே அழகி, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்தவர். அதே போல் அரவிந்த் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் அய்யனார் துணை என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஸ்ரேயா சின்னத்திரை பயணம்:

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரை நடிகை ஸ்ரேயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ஸ்ரேயா சுரேந்திரன் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கியிருந்தார். அதற்குப்பின் இவர் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

ஸ்ரேயா குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த செல்லம்மா சீரியலில் மேக்னா என்ற வில்லி ரோலில் நடித்திருந்தார். இந்த ரோலில் ஏற்கனவே திவ்யா நடித்திருந்தார். அவருக்கு பதில் தான் ஸ்ரேயா சுரேந்திரன் நடித்திருந்தார். இந்த சீரியலும் கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது. இதை அடுத்து இவர் எந்த தொடரிலுமே கமிட்டாகவில்லை.

ஸ்ரேயாவுக்கு நிச்சயதார்த்தம்:

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரேயா சுரேந்திரனுக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. இவரின் காதலர் ரோஹித். இது முழுக்க முழுக்க காதல் திருமணம். கூடிய விரைவிலேயே இவர்களுடைய திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement