காதலரை கரம் பிடித்த கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை ஸ்வேதா – மாப்பிள்ளை இவர் தான்.

0
1498
swetha

சீரியல் நடிகை ஸ்வேதா சுப்ரமணியன் தனது நீண்ட நாள் காதலரை மனம் முடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளது. பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான ஸ்வேதா சுப்பிரமணியன் ஊரடங்கிற்கு மத்தியில் சத்தமில்லாமல் தனது திருமணத்தை முடித்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார் ஸ்வேதா.

- Advertisement -

அதைத்தொடர்ந்து சின்னத்தம்பி வள்ளி கார்த்திகை பெண்கள் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்வேதா இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை கடந்த சில திணைகளுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தார் ஸ்வீதா. ஸ்வேதாவின் காதலரான அருண் என்பவருடன் தான் சுவேதாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்வேதாவிற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி கூட நடைபெற்று இருந்தது. அந்த வீடியோ வெளியான பின்னர் தான் ஸ்வேதாவிற்கு திருமணம் என்பதே பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் ஸ்வேதாவின் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement