சின்னத்திரை சீரியல் நடிகை வைஷாலிக்கு வளைகாப்பு நடந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வைஷாலி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சூப்பர் ஹீரோவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
https://www.youtube.com/watch?v=FioP2PMNUY8
இந்த சீரியலுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் திடீரென்று இந்த சீரியலில் இருந்து வைஷாலி விலகிவிட்டார். அதற்குப்பின் இவர் விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். முத்தழகு சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது.
வைஷாலி நடிக்கும் சீரியல்கள்:
அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஆனந்த ராகம் போன்ற பிற சேனல்களில் நடித்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா ரோலில் வில்லியாக நடித்து வருகிறார். அக்கா, தங்கைகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் மகாநதி. இந்த சீரியலில் விஜய்- காவேரி டிராக் சென்று கொண்டிருக்கின்றது. விஜயின் முன்னாள் காதலி தான் வெண்ணிலா.
https://www.youtube.com/watch?v=Oq7qCcocrrc
வைஷாலி குறித்த தகவல்:
வெண்ணிலா விபத்திற்கு பிறகு எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருக்க,காவிரியை விஜய் திருமணம் செய்து கொள்கிறார். பின் வெண்ணிலா உயிர் உடன் இருப்பது அறிந்து அவருக்கு பழைய நினைவுகள் வந்து விடுகிறது. தற்போது காவேரி கர்ப்பமாக இருக்கிறார். விஜய்,காவிரியை திருமணம் செய்த விஷயத்தை சொல்லியும் வெண்ணிலா பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அடுத்து என்ன? நடக்கும் என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
https://www.youtube.com/shorts/KlahP7AA0z4
வைஷாலி திருமணம்:
மேலும், இந்த சீரியலின் மூலம் வெண்ணிலாவாக மிரட்டி கொண்டிருக்கும் வைஷாலிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் வைஷாலி அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ஒரு பக்கம் இருக்க இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார் வைஷாலி.
https://www.youtube.com/shorts/f4sVBSsBB7o
வைஷாலி வளைகாப்பு:
அந்த வகையில் சமீபத்தில் இவர் தன் கணவருக்கு பரிசாக புதிய கார் ஒன்றை வாங்கித் தந்திருந்தார்.
அதற்குப்பின் இவர் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றையும் திறந்து வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வைஷாலி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் அறிவித்தார். இப்படி இருக்கும் நடிகை வைஷாலிக்கு வளைகாப்பு நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை வைஷாலிக்கு ஒன்பதாவது மாதம் வளைகாப்பை அவருடைய கணவர் சத்யா கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வைஷாலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.





