மகாநதி சீரியல் நடிகை வைசாலிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வைஷாலி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தந்தையாக நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் இந்த சீரியலில் இருந்து வைஷாலி விலகிவிட்டார். அதற்குப்பின் இவர் விஜய் டிவியில் முத்தழகு சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். முத்தழகு சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஆனந்த ராகம் போன்ற பிற சேனல்களில் நடித்து வந்தார்.
வைஷாலி நடிக்கும் சீரியல்கள்:
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் மகாநதி சீரியலில் வெண்ணிலா ரோலில் வில்லியாக நடித்து இருந்தார். அக்கா, தங்கைகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் மகாநதி. இந்த சீரியலில் விஜய்- காவேரி டிராக் சென்று கொண்டிருக்கின்றது. விஜயின் முன்னாள் காதலி தான் வெண்ணிலா. மேலும், இந்த சீரியலின் மூலம் வெண்ணிலாவாக மிரட்டி இருந்தார் வைஷாலி.

வைஷாலி குறித்த தகவல்:
சமீபத்தில் தான் சீரியலில் இவர் ட்ராக் முடிந்தது. அதோடு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் வைஷாலி அவர்கள் தன்னுடைய நீண்ட நாள் நண்பர் சத்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எந்த ஒரு மகிழ்ச்சியான செய்தியும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் இவர் தன் கணவருக்கு பரிசாக கொடுத்த புதிய கார், டான்ஸ் ஸ்டுடியோ போன்ற விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.
https://youtube.com/shorts/_dR2mjBkgbc?si=KumEJHW3DrR4vrbN
வைஷாலி குழந்தை:
மேலும், சில மாதங்களுக்கு முன் வைஷாலி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் அறிவித்தார். அதன் பின் நடிகை வைஷாலிக்கு வளைகாப்பு நடந்தது. இப்படி இருக்கும் நிலையில் வைஷாலிக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வைஷாலி - சத்யா ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவல் வெளியானது தொடர்ந்து பலருமே வைஷாலி- சத்யா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






