பிரபல சீரியல் நடிகை ஜூலிக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜூலி. இவருடைய உண்மையான பெயர் விசாலாட்சி. ஆனால், ஜூலி என்றால் தான் எல்லோருக்குமே தெரியும். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை சீரியல் வாய்ப்பு கிடைத்திருந்தது.
பின் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்சரும் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். அதை தொடர்ந்து சீரியலில் பிசியாக நடித்து இருந்தார் ஜூலி. திடீரென்று சில ஆண்டுகள் ஜூலி நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார். பின் இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி இருந்த சத்யா, சித்திரம் பேசுதடி என்ற சீரியல்களில் கமிட்டாகி நடித்து இருந்தார்.
ஜூலி குறித்த தகவல்:
நன்றாக தான் சீரியல் சென்று இருந்தது. யார் கண் பட்டதோ இந்த இரு சீரியல்களும் முடிந்துவிட்டது. இதனிடையே இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிகண்டனும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை. இதற்கான முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். மேலும், 10 வருடங்களுக்கு பின் கடந்த ஆண்டு ஜூலி கர்ப்பமாக இருந்தார். இதனால் இவர் மெட்டர்னிட்டி பிரேக் எடுத்திருக்கிறார்.
ஜூலி பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக பிரபல சேனலுக்கு ஜூலி பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர், எங்க ரெண்டு பேருக்குமே இந்த குழந்தை ரொம்ப ஸ்பெஷல். காரணம், எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிவிட்டது. முதலில் நான் கர்ப்பமாக இருந்தேன். அது அபார்ட் ஆகிவிட்டது. இரண்டாவது முறை கர்ப்பமானேன். அப்போதும் கலைந்து விட்டது. மூன்றாவது முறை டெஸ்ட் கொடுத்துவிட்டு ரிசல்ட் வர வரைக்குமே நாங்க ரெண்டு பேரும் பயந்து கொண்டு இருந்தோம். கன்ஃபார்ம் ஆனதும் ஹாஸ்பிடலிலேயே இரண்டு பேரும் அழுந்து விட்டோம்.
குழந்தை குறித்து சொன்னது:
அதோடு சிலர் வயதாகிவிட்டது, இதுக்கு மேல எப்படி என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு இவரை சந்தோஷப்படுத்தணும். இவருடைய பிரண்ட்ஸ் எல்லாம் குழந்தையோடு இருக்கும்போது இவர் மட்டும் தனியா நிற்பதை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். எனக்கு 42 வயதாகிவிட்டது. இதனாலே நிறைய ஃபங்ஷனுக்கு எங்களால் போக முடியாது. பலருமே இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்பார்கள். அது ரொம்ப மன வேதனையை கொடுத்தது. இந்த தருணத்திற்காக ரொம்பவே நாங்கள் ஏங்கி இருந்தோம் என்று சந்தோஷத்துடன் கூறியிருந்தார்.
ஜூலிக்கு பிறந்த குழந்தைகள்:
மேலும், கடந்த வாரம் தான் நடிகை ஜூலிக்கு வளைகாப்பு நடந்திருந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஜூலை 25-ஆம் தேதி நடிகை ஜூலிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறது. அதில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக ஜூலி அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். இதை பார்த்த பலரும் நடிகை ஜூலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.