மற்ற சேனல்களை எல்லாம் ஓரங்கட்டி – Trpயின் டாப் 6 இடங்களையும் பிடித்த சன் டிவி தொடர்கள்.

0
714
- Advertisement -

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். இதனால் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. இதனாலே மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட சின்னத்திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் மக்களை அதிகம் கவரும் சீரியல் என்று டிஆர்பி பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. பட்டியல் இதோ,

- Advertisement -

கயல்:

டிஆர்பியில் கயல் சீரியல் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை பி செல்வம் இயக்குகிறார். யாரடி நீ மோகினி தொடரில் நடித்த சைத்ரா ரெட்டி தான் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரேட்டிங் 10.49

வானத்தைப்போல:

இரண்டாவது இடத்தை வானத்தைப்போல சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாச கதை. கிராமத்து பின்னணியில் இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரை ராஜ் பிரபு எழுதுகிறார், ராமச்சந்திரன் இயக்குகிறார். இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் ரேட்டிங்க் 10.22

-விளம்பரம்-

கண்ணானே கண்ணே:

2020 ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பப்லு ப்ரிதிவிராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் அதிகளவில் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள். இந்த தொடர் ரேட்டிங்க் 9.8

இனியா:

இந்த தொடர் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. நாராயணமூர்த்தி இந்த தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஆலியா மானசா, ரிஷி, பிரவீனா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் இளைஞர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த தொடர் ரேட்டிங்க் 9.67

எதிர்நீச்சல்:

கோலங்கள் தொடர் இயக்குனர் திருச்செல்வம் தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடருக்கு ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். பெண் உரிமைக்காக போராடும் தொடராக இருக்கிறது. இந்த தொடரில் மாரிமுத்து, மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா உட்பட பல நடித்து வருகின்றனர். இந்த தொடர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவு ஆதரவு பெற்று வருகிறது. இந்த தொடர் ரேட்டிங்க் 9.66

சுந்தரி:

இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கேப்ரில்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரேட்டிங்க் 9.52

இதனை அடுத்து ஆனந்த ராகம், இலக்கியா போன்ற தொடர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சேனல் தரப்பில் சன் டிவி முதல் இடத்திலும் ஸ்டார் விஜய் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் ஜீ தமிழ், நான்காம் இடத்தில் கே டிவி, ஐந்தாவது இடத்தில் கலைஞர் டிவி இருக்கிறது.

Advertisement