பெரிய நடிகர்கள் ஒரு 500வாது கொடுங்க – சிகிச்சைக்கே கஷ்டப்படும் பாவா லக்ஷ்மணனை நேரில் சந்தித்து லொள்ளு சபா ஷேசு உருக்கம்.

0
1414
Seshu
- Advertisement -

மருந்து மாத்திரை கூட வாங்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். உதவுங்கள் என்று மனவேதனையுடன் நடிகர் பாவா லட்சுமணன் அளித்த பேட்டி வைரலானதை தொடர்ந்து அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்த வகையில் லொள்ளு சபா புகழ் சேஷு, பாவா லக்ஷ்மணனை நேரில் சந்தித்து தன்னால் முடிந்த பண உதவியை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் விவேக், வடிவேலு போன்ற பலருடன் நடித்த பாவா பாலகிருஷ்ணன் தற்போது இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதோடு பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் தவித்து வாடிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், சில வருடங்களாகவே எனக்கு சுகர் பிரச்சனை இருக்கிறது.சுகர் கண்ட்ரோல் மீறிப் போனதால் கடந்த பத்து நாட்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறேன். மருத்துவர்கள் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று கட்டைவிரலை எடுத்து ஆகணும் என்று சொல்லிவிட்டார்கள்.

- Advertisement -

ஆப்ரேஷன் எல்லாம் பண்ணி விரலை எடுத்து விட்டோம். ஆனால், அந்த காயம் சரியாகுவதற்கு நான்கு ஐந்து மாதம் ஆகும் என்று சொன்னார்கள்.ஏற்கனவே வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் தான் நாட்களை தள்ளிக் கொண்டிருக்கிறேன். ஆறு மாதமாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்போது கட்ட விரலையும் எடுத்து விட்டார்கள். இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காது தான் பெரிய வலியாக இருக்கிறது. காயம் எல்லாம் சரியான பிறகுதான் வாய்ப்பு தேட முடியும்.

அதுவும் கிடைக்குமா என்று தெரியவில்லை. உதவுவதற்கு என்னை பெத்தவங்களும் உயிரோடு இல்லை.அரசு மருத்துவமனையில் நல்லா பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் மருந்து, மாத்திரைகள், சாப்பாடு செலவு என்று ஏகப்பட்ட செலவிருக்கிறது. எங்களை மாதிரி நலிவடைந்த கலைஞர்களுக்கு திரைத்துறையினர் தான் உதவி செய்ய வேண்டும். எனக்கு இப்போது 58 வயதாகிறது. திருமணமே பண்ணிக் கொள்ளவில்லை.

-விளம்பரம்-

குழந்தைகள் இருந்தால் நான் ஏன் உதவி கேட்க போகிறேன். எனக்கு ஒரே ஒரு அக்கா தான் இருக்கிறார்கள்.அவர்களும் சொல்லிக்கிற அளவுக்கு வசதி எல்லாம் கிடையாது. அதனால்தான் திரைத்துறையிடம் உதவியை எதிர்பார்க்கிறேன் என்று வேதனையுடன் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து இவரை தாடி பாலாஜி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அதே போல kpy பாலா இவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியதோடு தன்னால் முடிந்த பண உதவியை செய்து வந்தார்.

இப்படி ஒரு நிலையில் லொள்ளு சபா புகழ் ஷேசு இவரை நேரில் சென்று பார்த்து பண உதவி செய்து இருக்கிறார். மேலும், பாவா லக்ஷ்மணன் நிலை குறித்து பேசிய அவர் நீங்க சீக்கிரம் மீண்டு வருவீர்கள், நாம் இணைந்து நடிப்போம். இந்த வீடியோவை பார்க்கும் பெரிய நடிகர்கள் உதவி செய்ங்க. உங்களால் முடிந்த 500 ரூபாய் 5000 ருபாயாவது கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும் என்று உருக்கமுடன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement