தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன் நேற்று (மார்ச் 26) இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன்.
டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.
இதையும் பாருங்க : முதலமைச்சரை விளக்கம் கொடுக்க சொன்ன வாலிபர். போலீஸ் ஸ்டேஷனில் விளக்கிய காவல் துறை.
மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஹானா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார் மேலும் சேதுராமனுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதுகெலும்பில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சேதுவின் இந்த திடீர் மறைவு திரை துறையில் உள்ள பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சேதுவின் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் தனது வருத்தத்தை கூறியுள்ள நடிகர் சந்தானம், என்னுடைய நண்பர் சேதுவின் மரண செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் மன அழுத்தத்துடனும் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
சரும நிபுணரான சேதுராமன் வெறும் மருத்துவராக மட்டும் இல்லாமல் அடிக்கடி மக்களுக்கு தேவையான சில மருத்துவ அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு மருத்துவ குறிப்புகளையும் அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அந்தவகையில் இவர் இறப்பதற்கு முன்பாக அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பாக தற்போது உலக நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
இதுதான் அவர் கடைசியாக பதிவிட்ட வீடியோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் டாக்டர் மற்றும் நடிகர் சேதுராமனின் இறுதி சடங்கு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சேதுராமன் தற்போது இப்படி ஒரு நிலையில் காணும் போது அனைவரும் நெஞ்சம் பதைபதைக்கிறது