யூடுயூபில் வரும் வதந்திகள் குறித்து ஷபானா பதில் அளித்து இருக்கிறார். வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். மேலும், இந்த சீரியலில் நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார்.
இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் செம்பருத்தி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் இவருக்கு சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
ஆர்யன் – ஷபானா காதல் :
இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்வதற்கு முன்பு சபானா தன்னுடைய திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். அதோடு இவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீர் திருமணம் செய்தது குறித்து ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பு இருந்தார்கள்.
திடீர் திருமணம் :
அதுமட்டுமில்லாமல் இவர்கள் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறப்பட்டது. அது என்னவென்றால், ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதம் சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது. இதனால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாகத் திருமணம் முடித்து விட்டதாகவும் கூறப்பட்டது.
பெற்றோர்கள் எதிர்ப்பு :
இதனால் தான் திருமணத்தில் ஷபானா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் ஆர்யன் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிஇருப்பதாகவும், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஆர்யன் வீட்டிற்கு இன்னும் ஷபானா, ஆர்யன் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதுக்கிடையில் தேனிலவுக்காக புதுச்சேரிப் பக்கமுள்ள ஒரு ரிசார்ட்டுக்கு 4 நாட்கள் சென்ற இவர்கள் அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டார்கள் என்றும், ஆர்யான் வீட்டில் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்துவைக்கவே முடிவு செய்துவிட்டார்கள் என்றெல்லாம் சர்ச்சை கிளம்பியது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி :
இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை தன் கணவருடன் கொண்டாடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தன் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் ஷபானா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா, அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
யூடுயூப் வதந்திகள் குறித்து ஷபானா :
அப்போது ரசிகர் ஒருவர், யூடியூப் வதந்திகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார் இதற்கு பதிலளித்த ஷபானா யூடியூபில் வரும் செய்திகளை கண்மூடித்தனமாக நம்பும் பார்வையாளர்களை (என்னையும் உட்பட) நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது. என்னை பொருத்தவரை அவர்கள் ஒரு சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.