இனி ஒரே சேனலில் வரும் ஆர்யன்-ஷபானா, என்ன சீரியல்ன்னு தெரியுமா? சந்தோஷத்தில் ரசிகர்கள்

0
887
- Advertisement -

ஆரியன் – சபானா ஒரே சேனலில் நடிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். இதனால் சின்னத்திரை நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை மந்தாரம்’ எடுக்கப்பட்டது. ஆர்மபத்தில் இந்த தொடரில் ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி நடித்து இருந்தார். பின் இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

அவருக்கு பதிலாக அக்னி இந்த தொடரில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியலில் நாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷபானா. இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. பின் இவர் சீரியல் நடிகர் ஆர்யனை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதன் பின் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்து இருந்தார்கள். ஆனால், ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆர்யன் இந்து மதத்தை சேர்ந்தவர்.

ஷபானா-ஆர்யன் திருமணம்:

ஆகையால் இவர்களின் திருமணத்திற்கு சபானா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இருந்தாலும் பெற்றோர்களை மீறி ஆர்யன்-ஷபானா திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் திருமணம் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். சபானா தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்யலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், திடீர் திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகியது ரசிகர்கள் அதிர்ச்சியை தந்தது.

-விளம்பரம்-

ஆர்யன் நடிக்கும் சீரியல்:

அதற்கு பின் இவர் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆர்யன் நடிக்கும் சீரியல் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆர்யன் லீட் ரோலில் நடித்திருக்கும் புத்தம் புது சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக மோக்‌ஷிதா நடிக்கிறார். பிரபல தெலுங்கு சீரியல் ’ரத்தமா குத்துரு’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர். தெலுங்கில் இந்த சீரியல் பயங்கர ஹிட் அடித்தது.

சீரியல் குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியல் அம்மா -மகள் சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த தொடரின் தமிழ் ரீமேக் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பிரபல நடிகை அர்ச்சனாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர நாம் இருவர் நமக்கு இருவர் காயத்ரி, பிரணிக்கா, சுபத்ரா ஆகியோரும் இந்த சீரியலில் நடிக்கிறார்கள். ஏற்கனவே ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிக்க இருக்கும் நிலையில் இப்போது ஆர்யன் ஜீ தமிழில் இணைந்திருக்கிறார்.

Advertisement