அது நடந்தா சந்தோசம் தான்.ஆனா இப்போ அது காரணம் இல்ல – மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து விலகிய ஷபானா விளக்கம்.

0
535
Shabana
- Advertisement -

சன் டிவி சீரியலில் இருந்து பிரபல நடிகை ஷபானா விலகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் ஷபானா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் ஷபானா. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். மேலும், இந்த சீரியலில் ஹீரோவாக ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ், நாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து இருந்தார். இவர் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாள சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆர்யன் – ஷபானா காதல் :

இதனிடையே ஷபானா– ஆர்யன் இருவரும் காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் திருமணத்திற்கு ஷபானா-ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. காரணம், ஆர்யன் இந்து, ஷபானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தான் இவர்கள் அவசர அவசரமாக நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்களது திருமணம் இந்துமத முறைப்படி நடந்தது.

ஆர்யன்-ஷபானா நடிக்கும் சீரியல்கள்:

திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களின் கேரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் ஹீரோவாக ஆர்யன் நடித்து வருகிறார். அதே போல் ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை நன்றாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய ஷபானா:

இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து நடிகை ஷபானா விலகி இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விலகியதற்கு காரணம், அவர் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் சீரியலை விட்டு விலகுகிறார் என்றெல்லாம் கூறி
பலருமே சபானாவுக்கு வாழ்த்துகள் எல்லாம் தெரிவித்துள்ளார்கள். இது முதல் முறை இல்லை. பல முறை ஷபானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷபானா பதிவு:

இந்நிலையில் இது குறித்து ஷபானா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் கர்ப்பமாக இல்லை. இதற்கு முன் கூட நிறைய முறை நான் கர்ப்பமாக இருப்பதாக வாழ்த்துக்களை சொல்கிறார்கள். நான் சீரியலை விட்டு விலகுவதற்கு காரணம் அதுவும் இல்லை. மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலி நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த சீரியலில் இருந்து விலகுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. நன்றாக யோசித்த பிறகு தான் இந்த முடிவை எடுத்தேன். புது ப்ராஜெக்ட்டில், நல்ல கதாபாத்திரத்துடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், ஷபானா விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement