ஒரே படத்தில் அறிமுகமாகும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள்- யார் யாருன்னு நீங்களே பாருங்க!

0
398
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகைகள் இருவரும் வெள்ளித்திரை படத்தில் கமிட் ஆகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஜீ தமிழ் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஷபானா – ரேஷ்மா. இவர்கள் இருவருமே நெருங்கிய தோழிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சமீபத்தில் முடிவடைந்த செம்பருத்தி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் இவர் பார்வதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. சமீபத்தில் தான் அனைவரும் எதிர்பார்த்த இந்த சீரியல் முடிவடைந்தது.

ஷபானா நடிக்கும் சீரியல்:

தற்போது ஷபானா அவர்கள் சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கூடிய விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சபானாவிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனிடையே ஷபானா அவர்கள் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல் ஜீ தமிழ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ரேஷ்மா குறித்த தகவல்:

அதே சீரியலில் நடித்த நடிகர் மதனை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவரும் சேர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் ஷபானா – ரேஷ்மா இருவரும் வெள்ளி திரையில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் மூலம் இவர்கள் இருவருமே பயங்கர நெருங்கிய தோழிகள் என்றே சொல்லலாம்.

ஷபானா – ரேஷ்மா நடிக்கும் படம்:

இவர்கள் இருவரும் சேர்ந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி அதற்கான வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருமே ஒரே படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமாக இருக்கிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் பகையே காத்திரு. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ரேஷ்மா – ஷபானா இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement