36மில்லயன் பாலோவர்கள், ஆனால், 6 பேரை மட்டும் இன்ஸ்ட்டாவில் பின் தொடரும் ஷாருக்கான். யார் யார் தெரியுமா ?

0
396
shahrukhkhan
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் “பதான்” படத்தை பற்றி பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “பதான்” படத்தை எதிர்த்தவர்களை கிண்டல் செய்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பதான் படம் :

இதனை அடுத்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

காவி உடை சர்ச்சை :

ஆனால் இப்படத்தின் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான போது பலவிதமான சர்ச்சைகளில் பதான் படமானது சிக்கியது. ஓன்று கவர்ச்சி மற்றொருன்று நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை. அதாவது கடந்த வருடம் வெளியான பேஷாராம் ரங் என்ற பாடலில் நடிகை தீபிகா படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் இது சமுதாயத்திற்கு சீர்கேடு என்ற குற்றசாட்டு எழுந்தது. அதோடு தீபிகா காவி நிற ஆடை அணிந்திருந்தால் இது இந்துத்துவ உணர்வுகளை புண்படுத்துகிறது என்று குற்றசாட்டு எழுப்பப்பட்டது.

இப்படி தொடர்ந்து பல விதமாக எதிர்ப்புகள் தான் இப்படம் இந்த அளவுக்கு வெற்றியை காரணம் என்ன கூறலாம். கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி வெளியான “பதான்” படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூல் சாதனை படைத்து வருகிறது. பதான் படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 மாதம் முடிவடைய இருக்கும் நிலையில் 900 கோடி வசூல் செய்துள்ளது. அதோடு இன்னும் சில நாட்களில் ஆயிரம் கோடியை இப்படம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

ஷாருக்கான் இன்ஸ்டா :

பதான் படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த பின்னர் கூட இப்படத்தை பற்றியும் நடிகர் ஷாருக்கான் பற்றியும் பலவிதமான கருத்துகள் சோசியல் மீடியாவில் நிலவி வந்தது. படத்தை பற்றியும் தன்னை பற்றியும் ரசிகர்கள் கேட்ட கேளிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்து வந்தார். இந்த நேரத்தில் ஸ்சருகானின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிடையும் அதிகரித்து. 36 மில்லியன் பேர் அவரை தற்போது பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் ஷாருக்கான் ஆறு பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.

ஷாருக்கான் பின்தொடரும் முக்கிய நபர்கள் :

அந்த ஆறு முக்கியமான நபர்களை அவரது மனைவி கவுரிகான், அதற்கு பிறகு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அதே போல ஷாருக்கானின் மகள் சஹானா கான் ஆகியோரும் அடுத்த மூன்று இடங்களில் ஷாருக்கானை சகோதரி மகளான ஆலியா சிபா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தாத்லானி, அதற்கு பிறகு நெருங்கிய நண்பர் காஜல் ஆனந்த் உள்ளிட்டோரை ஷாருக்கான் பின்தொடர்கிறார். 30 மில்லியனுக்கு மேலே பின்தொடர்பவர்கள் உள்ள ஒரு பிரபலம் 6 பேரை மட்டுமே பின்தொடர்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

Advertisement