மகனின் வருகை – நடிகர் ஷாருக்கானின் அடுத்த கட்ட திட்டம் என்ன தெரியுமா ?

0
394
aryan
- Advertisement -

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் உபயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகளும் கருத்துக்களும் எழுந்தது.மேலும், ஷாருக்கான் தன்னுடைய மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தவில்லை.படப்பிடிப்புகள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது, கதைக்கேற்பது, விளம்பர படங்களில் நடிப்பது என அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்து விட்டார்.

-விளம்பரம்-

மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்று சொல்லலாம். சமீபத்தில் தான் அவருடைய மகன் சிறையிலிருந்து வெளிவந்தார். மேலும், ஒவ்வொரு வாரமும் போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது மன நிம்மதி அடைந்த சாருக்கான் வழக்கமான தன்னுடைய பணிகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்.

- Advertisement -

அதோடு தன் மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், தான் செய்யவிருக்கும் வேலைகள் குறித்து ஷாருக்கான் திட்டமிட்டு தொடங்கியிருக்கிறார். வரும் 15ஆம் தேதி மும்பையில் நடக்கும் பதான் படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்க இருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக படத்தின் உதவி இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். அதோடு இந்த படப்பிடிப்பு 15 முதல் 20 நாட்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பைத் தொடர ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், எந்த நாட்டில் படப்பிடிப்பை நடத்துவது என்பது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். படத்தில் நடிகர் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவருடைய படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. இந்த படம் இல்லாமல் அட்லீயின் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாரா ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார். ஷாரூக்கான் வருகைக்காக தான் அட்லியின் படமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு அட்லி அவர்கள் ஷாருக்கான் இல்லாத காட்சிகளை எடுத்து முடித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement