லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஷாருக்கான் செய்த காரியம் சர்ச்சையை கிளப்பியது- விமர்சிக்கும் ரசிகர்கள்

0
483
- Advertisement -

பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது நடிகர் ஷாருக்கான் செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பழம்பெரும் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஹேமா. இவர் 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார். தமிழில் கூட பல பாடலைப் பாடியுள்ளார். மேலும், லதா மங்கேஷ்கர் இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர்.

-விளம்பரம்-

அதோடு இவர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை இவர் மூன்று முறை பெற்று இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தாதா சாகேப் பால்கே, பாரத ரத்னா விருது, பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

லதா மங்கேஷ்கர் மறைவு:

பிறகு 28 நாட்களாக இவருக்கு தீவிர தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி லதா நேற்று காலை 8 மணிக்கு மேல் இறந்து விட்டார். இவரின் மறைவு இந்தியாவில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில கோவிந்த், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர அரசு லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அரசு விடுமுறை அளித்துள்ளது.

லதா மங்கேஷ்கரின் இறுதி அஞ்சலி:

அதோடு ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பதாக இருந்த நிதிக் கொள்கையை வேறு ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறது. மேலும், அவரது உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நடந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மும்பை மேயர் கிஷோரி, முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்நவிஸ், துணை முதல்வர் அஜித்பவார், அமைச்சர் சகன் புஜ்பால் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

-விளம்பரம்-

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியவர்கள்:

மேலும், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதோடு பிரபலங்கள் பலரும் லதா மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பொதுமக்கள் பலரும் தாதர் சிவாஜி பார்க்கில் நீண்ட வரிசையில் நின்று லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புக்கு நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய செயலாளர் பூஜாவுடன் சேர்ந்து லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது ஷாருக்கான், லதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சில நொடிகள் இஸ்லாமிய முறைப்படி பிராத்தனை செய்தார்.

இறுதி சடங்கில் ஷாருக்கான் செய்தது:

பொதுவாக இஸ்லாமிய முறைப்படி இரு கரங்களையும் வேண்டி பிரார்த்தனை செய்து காற்றில் ஊதுவார். இதை தான் ஷாருக்கான் செய்தார். ஆனால், அவர் லதாவின் சிதை அருகில் எச்சில் துப்பியதாக மத பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும், இது குறித்து சாருக்கானை சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சித்தனர். அதில் சிலர் இப்படித்தான் இறுதி சடங்கில் கலந்து கொள்வீர்களா? என்றும், இது என்ன கலாச்சாரம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொரு சாரார், ஷாருக்கான் இஸ்லாம் மதப்படி துவா செய்து காற்றில் தான் ஊதினார் தவிர அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் ஆதரவாக பதில் அளித்து வருகின்றனர். இதற்கு சாருக்கான் தரப்பிலிருந்து என்ன பதில்? வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement