வெளிநாட்டில் இருந்து ஷாருக்கான் கொண்டு வந்த ஆடம்பர பொருள் – தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் அதிகாரிகள். என்ன நடந்தது.

0
286
Shah Rukh Khan
- Advertisement -

ஆடம்பர கடிகாரங்களுக்கு வரி கட்டவில்லை என்று ஏர்போட்டிலேயே ஷாருக்கானை தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது. தற்போது ஷாருக்கான் அவர்கள் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

- Advertisement -

அட்லீ – ஷாருக்கான் கூட்டணி:

இந்த படத்திற்கு லயன் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். அதோடு இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சுங்கவரி பிரச்சனை:

கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆடம்பர கடிகாரங்களுக்கு வரி கட்டவில்லை என்று ஏர்போட்டிலேயே ஷாருக்கானை தடுத்து நிறுத்தி இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமா நடிகர்களுக்கு சுங்கவரி பிரச்சனை வருவது வழக்கமான ஒன்றுதான். பல நடிகர்கள் தாங்கள் வாங்கும் ஆடம்பரப் பொருட்களுக்கு சுங்கவரி செலுத்துவதில்லை.

-விளம்பரம்-

ஷாருக்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சி:

அதுவும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் பல பொருள்களுக்கு சுங்க வரி கட்டாமல் பல வழக்குகளில் சிக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது ஷாருக்கானும் மாட்டியிருக்கிறார். ஷாருக்கான் அவர்கள் நவம்பர் 11 அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். அங்கு சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவருக்கு குளோபல் ஐகான் ஆஃப் சினிமா மற்றும் கலாச்சார கதை விருது வழங்கப்பட்டது.

ஷாருக்கான் சுங்கவரி பிரச்சனை:

பின் நிகழ்ச்சி முடிந்து ஷாருக்கான் இந்தியா திரும்பியிருந்தார். அப்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3ல் தனியார் ஜெட் விமானத்தில் வந்திருக்கிறார். அப்போது அவர் கொண்டு வந்த பொருள்களில் ஆடம்பர பொருட்கள் இருந்தது. அதிலும் சுமார் 18 லட்சம் மதிப்புள்ள ஆறு ஆடம்பர கடிகாரங்களுக்கான பேக்கேஜிங் இல்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து ஷாருக்கான் சுங்கவரி செலுத்தவில்லை என்பது உறுதி செய்திருந்தார்கள். பின் ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர் சுங்கவரி செலுத்தியபிறகு தான் விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுப்ப அனுமதித்திருக்கிறார்கள்.

Advertisement