8 ஆண்டு கழித்து அட்லீ ஷூட்டிங்கில் ஷாருக்கை சந்தித்த யோகி பாபு – படப்பிடிப்பின் போது அவர் அளித்துள்ள சர்ப்ரைஸ்.

0
1153
atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கான் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட புனேவில் ஷாருக்கான், நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது யோகி பாபு இணைந்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது தமிழ் சினிமா உலகில் காமெடி கிங்காக யோகி பாபு அசுர வளர்ச்சி எடுத்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் லைகா தயாரிக்கும் படமொன்றில் யோகி பாபு கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

தற்போது ஷாருக்கான்– யோகி பாபு காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக யோகி பாபு அவர்கள் மூன்று வாரங்கள் தேதி தந்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு இந்த மாதிரி மொத்தமாக கால்ஷீட் தந்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாருக்கானுடன் யோகி பாபு நடித்த போது தனது மண்டேலா படம் குறித்து யோகி பாபு கூறியுள்ளார். அதற்கு சாருக்கான் அவர்கள் அந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு யோகி பாபு ஆச்சரியமடைந்தார்.

மேலும், 2021 முதல் காலாண்டில் உலக அளவில் வெளியான சிறந்த 25 படங்கள் பட்டியலை பிரபல இணையதளம் வெளியிட்டு இருந்தது. அதில் மண்டேலாவும் இடம் பெற்றிருந்தது. அதனால் உலக அளவில் மண்டேலா படம் பிரபலமாக இருக்கிறது என்று குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் யோகிபாபுவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement