தன் பங்களாவிற்கு புதிய பெயர் பலகை, விலையை கேட்டு அசந்த ரசிகர்கள் – பலகையே இவ்ளோன்னா பங்களாவின் விலை எவ்ளோ தெரியுமா ?

0
169
- Advertisement -

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய வீட்டிற்கு பல லட்சம் ரூபாய் செலவில் புதிய பெயர் பலகை வைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பாலிவுட் சினிமா துறையில் பல ஆண்டு காலமாக முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவர் இந்தியில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் உபயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் சோஷியல் மீடியாவில் பல சர்ச்சைகளும் கருத்துக்களும் எழுந்து இருந்தது. மேலும், ஷாருக்கான் தன்னுடைய மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தாமல் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.

- Advertisement -

சிறையில் இருந்து வெளிவந்த ஆர்யன் கான்:

படப்பிடிப்புகள், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது, கதைக்கேற்பது, விளம்பர படங்களில் நடிப்பது என அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்து இருந்தார். சமீபத்தில் தான் அவருடைய மகன் சிறையிலிருந்து வெளிவந்து இருந்தார். மேலும், ஒவ்வொரு வாரமும் போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பின் மன நிம்மதி அடைந்த சாருக்கான் வழக்கமான தன்னுடைய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதோடு தன் மகனையும் கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

பழைய பெயர் பலகைகள்

பதான் படம் பற்றிய தகவல்:

தற்போது ஷாருக்கான் அவர்கள் பதான் படப்பிடிப்பில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரஹாம் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஷாருக்கான் அவர்கள் அட்லீயின் படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஹீரோயின் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு லயன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஷாருக்கான் வீட்டில் புது பலகை பெயர்:

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் வீட்டின் பெயர் பலகை புதிதாக மாற்றி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாந்திரா கடற்கரை அருகில் ஷாருக்கானின் பங்களா ஒன்று உள்ளது. அதோடு இது சுற்றுலா தளம் போல இருக்கிறது. மேலும், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாருக்கான் பங்களா அருகில் நின்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சாருக்கான் பங்களாவின் பெயர் மன்னத் லேண்ட் எண்ட். இதற்கு முன்பு இந்த பெயர் பலகை நேர்கோட்டில் இருந்தது. தற்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகை செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த புது பெயர் பலகை 20 முதல் 25 லட்சம் வரை செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

புது பலகை வடிவமைப்புக்கு காரணம்:

இதுகுறித்து ஷாருக்கான் தரப்பில் கேட்ட போது கூறியிருப்பது, ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தங்களது குடும்பத்தின் பிரபலம் மற்றும் பெயருக்கு ஏற்றபடி வீட்டின் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் அவரே பெயர் பலகையை வடிவமைத்துள்ளார். அதில் ஷாருக்கானுக்கு எந்த பங்கும் கிடையாது. குடும்பத்தின் தலைவர் கௌரி கான் என்பதால் அவர் எடுக்கும் முடிவை குடும்பம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தப் புதிய பெயர் பலகை அருகில் நின்று ரசிகர்கள் பலர் செல்பி எடுத்து வருகின்றனர். மேலும், 2001 ஆம் ஆண்டு இந்த பங்களாவை 13.13 கோடிக்கு ஷாருக்கான் வாங்கி இருந்தார். தற்போது இதனுடைய மதிப்பு 200 கோடி ஆகும்.

Advertisement