மம்மூட்டி மோகன் லால் ரெண்டு பேருமே என்ன இப்படி பண்ணாங்க – முதன் முறையாக மனம் திறந்த ஷகீலா.

0
1041
Shakeela
- Advertisement -

ஒரு காலத்தில் நடிகர் மம்முட்டி என்னை அழிக்க நினைத்தார் என்று நடிகை ஷகிலா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-
shakeela

பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

- Advertisement -

ஷகீலா திரைப்பயணம்:

கடந்த இரண்டாம் சீசனில் நிகழ்ச்சி போட்டியாளராக ஷகிலா கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீப காலமாகவே ஷகிலா சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். மக்களுக்காக பல போராட்டங்களிலும் ஈடுபட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட பேச்சுலர்ஸ்காக இரவு நேரத்தில் ரோட்டில் உட்கார்ந்து ஷகிலா போராட்டம் செய்திருந்தார்.

shakeela

இப்போ அம்மாவாக பாக்குறாங்க :

இந்த நிலையில் ஷகிலாவின் பேட்டி வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னை சகிலாவாக பார்த்ததுக்கும், அம்மாவாக இப்போ பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. இப்போது இருக்கிற சூழல்தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. என்னை யாராவது ஆன்ட்டி என்று அழைத்தால் அவர்களிடம் அம்மா என்று அழையுங்கள் என்று நானே கூறுகிறேன். அந்த வார்த்தை என்னை பொறுப்பாக மாற்றுகிறது. கேரளாவில் என்னுடைய படங்கள் வெளியானதால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது. எனது படங்களில் பிட்டு போட்டு ஓட்டி ரிலீஸ் பண்றாங்க என்பதை கேட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது.

-விளம்பரம்-

கைவிடப்பட்ட படங்கள் :

சென்சார் முடித்த படங்களையே இப்படி செய்கிறார்கள் என்றால் 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள். என் படத்தை எடுப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் தான் செலவாகும். ஆனால், அந்த செலவுக்கு பலரும் கடன் வாங்கி தான் படத்தை எடுப்பார்கள். அப்படி இருக்கும்போது சென்சார் கொடுக்காமல் தடுத்து தயாரிப்பாளர்களை சிரமப்படுத்தினர். எனக்கு இதெல்லாம் கோபம் ஏற்படுத்தி இருந்தது. இது தவிர 21 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி இருந்தேன். அதன் பின் 2001 இல் இனி இது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்து பேட்டியும் அளித்திருந்தேன். கொடுத்த அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டேன்.

மம்மூட்டி மோகன் லால் :

22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், இன்னும் அதே சக்கிலாவாக தான் சிலர் பார்க்கிறார்கள். நான் மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் ரசிகை. மம்முட்டி மேலே எனக்கு கோபமில்லை. ஆனால், அவர்கள் தான் என்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்து இருந்தார். இது கூட நான் கேள்விப்பட்டது தான் தவிர உண்மையா என்று எனக்கு தெரியாது. மம்முட்டி ஒரு கட்டத்தில் கோவில் விழாக்களுக்கு என்னை அழைப்பு விடுக்க மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். அவருடைய கோபம் நியாயமானது தான். அவர்கள் 5 கோடி செலவழித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் பத்து லட்சத்தில் படம் எடுக்கிறோம். 10 லட்சம் ரூபாய் பணம் 4 கோடி படத்தை காலி பண்ணால் கோபம் வர தானே செய்யும். அப்படித்தான் என் மீது வருத்தம் இருந்திருக்கும். அவர்கள் என்னை தடை செய்ய நினைத்தபோது நானே என் நடிப்பை தடை செய்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement