ஸ்ருதி நாராயணன் விவகாரம் தொடர்பாக நடிகை ஷகீலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஸ்ருதி நாராயணன் பஞ்சாயத்து தான் சென்று கொண்டு இருக்கிறது. சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் தோழியாக வித்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலில் இவர் ரோகினி செய்யும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் உறுதுணையாக நிற்கிறார்.

இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோவை இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இது பார்த்து சிலர், இது மார்ப்பிங் வீடியோ என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், படத்தின் வாய்ப்புக்காக தான் இவர் இப்படியெல்லாம் வீடியோ செய்து வெளியிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால், இவருடைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
சீரியல் ஸ்ருதி நாராயணன் வீடியோ:
மேலும், இது தொடர்பாக சுருதி நாராயணன் போட்ட பதிவில், இரண்டு பெண்கள் ஒரே முக சாயலில் இருக்கிறார்கள். அதில் ஒருவர் ரியல், இன்னொருவர் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. தன்னைப் பற்றி பரவும் வீடியோ மார்ப்பிங் செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இருந்துமே விடாமல் சுருதி நாராயணனை சோசியல் மீடியாவில் மோசமாக விமர்சித்தும் திட்டியும் வருகிறார்கள். பின் இது தொடர்பாக ஸ்ருதி நாராயணன் பதிவில், நானும் தொடர்பாக எனக்குமே உணர்ச்சிகள் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=Mm9idHloFKc
ஸ்ருதி நாராயணன் பதிவு:
எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் ரொம்ப மோசமாக விமர்சித்து போடுகிறீர்கள். இப்படி காட்டுத்தீயாய் போல பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டும் என்றால் உங்களுடைய அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண்தான். அவர்களுக்குமே என்னை போன்ற உடல் இருக்கிறது. கமெண்டில் என்னைத்தான் எல்லோருமே குறை சொல்கிறார்கள்.

ஸ்ருதி நாராயணன் விளக்கம்:
அந்த வீடியோவை லிங்க் செய்தவரை எந்த கேள்வியுமே கேட்கவில்லையே என்று ஆக்ரோஷமாக கூறி இருந்தார். இதற்கு பிரபலங்கள் சிலர் ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஷகீலா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=pHwL_qycaMM
ஷகீலா பேட்டி:
அதில் அவர், அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான். ஏஐ என்று சொல்லி தப்பிக்கலாம் முடியாது. இவ்வளவு நடந்த பிறகு அந்த ஆண் யார்? என்று அவர் சொல்லவே இல்லை. ஒரு புகார் கூட போலீசில் கொடுக்கவில்லை. அவர் புகார் கொடுத்தால் தான் தவறு யார் மீது இருக்கிறது என்று தெளிவாக ஒரு முடிவு செய்ய முடியும். அந்த வீடியோ வெளியிட்டவனை விடவே கூடாது. ஆனால், இதை தெரிந்தே செய்த நடிகையின் மீதும் தவறு இருக்கிறது. என்று கூறியிருக்கிறார்.






