அன்னிக்கி என்ன பாக்க 300 பேர் வந்தாங்க உள்ள விடல, இன்னிக்கி என்ன பாக்க 1000 கண்கள் இருக்கு – கோவில் விழாவில் ஷகீலா உருக்கம்.

0
420
shakeela
- Advertisement -

கடந்த முறை என்னை நுழைய விடவில்லை ஆனால் இந்த முறை சிவனுடைய திட்டம் தான் என்று கோவில் விழாவில் ஷகீலா உருக்கமாக பேசிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டியவர். இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் ஷகிலா நடித்து இருந்தார். ஆனால், இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஷகிலா குறித்த தகவல்:

கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி அவர் மீதான தவறான பிம்பத்தை மாற்றி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பலரும் அவரை சகிலா அம்மா என்று அழைக்க துவங்கி விட்டனர். இதன் பின் இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

ஷகிலா சந்தித்த பிரச்சனை:

அதன் பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கோழிக்கோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஷகிலா சென்று இருந்தார். ஆனால், சகிலா சிறப்பு விருந்தினர் என்ற உடன் அவரை வணிக வளாக நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதோடு நிகழ்ச்சியையும் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதியே நிகழ்ச்சி ரத்து செய்ததாக வணிக வளாக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.

-விளம்பரம்-

சிறப்பு விருந்தினராக ஷகிலா:

இந்த நிலையில் ஷகிலா அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோவில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த விழாவில் ஷகிலா அவர்கள் கூறியது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளுடைய ஆசிர்வாதம் தான். நான் கடந்த முறை கேரளா வந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தேன்.

விழாவில் ஷகிலா சொன்னது:

வணிக வளாகம் ஒன்றில் நுழைய கூட அனுமதிக்கவில்லை. ஆனால், கடவுள் எனக்காகத்தான் இந்த திட்டங்களை செய்திருக்கிறார் என்று இப்போது உணர்கிறேன். வணிக வளாகத்தில் என்னை பார்க்க 200, 300 பேர் தான் வந்திருந்தனர். ஆனால், இப்போது என்னை ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கிறார்கள். இது சிவனுடைய திட்டம் என்று பேசி இருந்தார்.

Advertisement