குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத போதிலும், தாய்மையை போற்றும் வகையில் மிளா நடத்திய போட்டோ ஷூட்.

0
1095
mila
- Advertisement -

செயற்கையான முறையில் கர்ப்பிணி போன்று மிளா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. ஒரு காலத்தில் சினிமா உலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் பயங்கர குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

மேலும், கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றியது. அதுமட்டும் இல்லாமல் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியலில் நடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு அவருடைய உண்மையான பெயர் ஹிஷாம். இவர் துபாயை சேர்ந்தவர். தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் தான் தன்னுள் பெண்ணை இருப்பதை உணர்ந்து பெண்ணாக மாறினார். அதற்கு பின் தான் சகிலா மிளாவை தத்து எடுத்தார். பின் சகிலா பல யூடியூப் சேனலுக்கு மிளா குறித்து பேட்டி கொடுத்திருந்தார். மேலும், ஷகிலாவும், மிளாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர். இவர் தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். அது மட்டுமில்லாமல் பல திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக மிளா திகழ்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிளா கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் நமிதா மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மிளாவிடம் கேட்டதற்கு நமீதா மாரிமுத்து திருநங்கைகளின் சார்பாக சென்றது பெருமையாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் மிளா பேபி கேர்ள் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் அவர் போட்டோ ஷூட் நடத்தி வீடியோக்களை வெளியிடுவார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் மிளா கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது செயற்கையான முறையில் கர்ப்பிணி போன்றவற்றை செட் செய்த போது மிளா உணர்ச்சிவசப்பட்டு அழுந்து இருக்கிறார். இந்த காட்சி பார்ப்பவர்களை உறைய வைத்திருக்கிறது. தற்போது மிளாவின் கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து அனைவரும் பாசிட்டிவான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement