என் கல்யாண வீடியோக்கு இத்தனை லட்சம் தந்தாங்க அதான் பண்ணேன் – அம்பலமான திவ்யாவின் நாடகம். வெளுத்து வாங்கிய ஷகிலா.

0
1879
- Advertisement -

காசுக்காக எதைக் கொடுத்தாலும் தின்பியா? என்று திவ்யாவை ஷகிலா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவை தவறான முறையில் பலபேர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் யூடியூபில் பிரபலமாகி அதை தவறாக பயன்படுத்தி வந்த பெண்களில் ஒருவர் திவ்யா. இவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியை சேர்ந்தவர். இ வர் டிக் டாக் செயலி இந்தியாவில் இருந்தபோது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட உடன் யூடியூப் சேனல் ஒன்று தனியாக தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் இவர் மீது தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்து இருக்கிறார்கள். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் திவ்யா மீது வழக்கு பதிவு செய்து கைதும் செய்து இருந்தார்கள். அதோடு இவரை சிறையில் அடைத்து இருந்தார்கள்.

- Advertisement -

திவ்யா குறித்த சர்ச்சை:

இதுமட்டுமில்லாமல் திவ்யா இதற்கு முன்பு திருநங்கை குறித்து அவதூறாக பேசியதால் திருநங்கைகள் பலர் இவரின் வீடு தேடி சென்று வெளுத்து வாங்கி இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும், இவர் ஏதாவது ஒரு தேவை இல்லாத வேலையை செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் youtuber ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் செய்த ரில்ஸ் வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

திவ்யா செய்த செயல்:

ஆனால், இந்த திருமணம் காசுக்காக, கண்டன்டுக்காக செய்தது என்றும் கூறியிருந்தார்கள். ஏற்கனவே ஈஸ்வரனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஷகிலா அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் திவ்யா கலந்து இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் திவ்யா கூறியிருந்தது, என் மேல் வழக்கு இருக்கிறது. நான் எம் எஸ் சி படித்திருக்கிறேன். எனக்கு யாரும் வேலை தரவில்லை. எனக்கு பணம் வேண்டும். தேனீ காவல் நிலையத்திற்கு சென்று வரவேண்டும், வக்கீலுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதனால் தான் கன்டென்டுக்காக தேனீ ஈஸ்வர் என்னை அணுகினார்.

-விளம்பரம்-

திவ்யா சொன்னது:

எனக்கு பணம் தேவை இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்வது போல கண்டெண்டு எடுத்தோம். விஜய், அஜித் நடிப்பது போல தான் நீயும் இந்த கல்யாணத்தில் வந்து நடி என்று ஈஸ்வர் என்னிடம் கூறினார். எனக்கும் பண தேவை இருந்ததால் நானும் நடித்தேன். அதிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பாதித்தேன் என்றெல்லாம் திவ்யா வழக்கம் போல கடுப்பாகும்படி பேசி இருந்தார். இதைக் கேட்ட ஷகிலா. காசு கொடுத்தால் என்ன வேணாலும் பண்ணுவியா? கண்டென்ட் வேண்டும் என்பதற்காக எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவியா? என்று கோபமாக பேசி இருக்கிறார்.

திவ்யாவை வெளுத்து வாங்கிய ஷகீலா:

உடனே திவ்யா, நாங்கள் பொறுப்பு துறப்பை போட்ட பின்பு தான் இந்த வீடியோவை பதிவிட்டோம். ஆனாலும், எங்க போனாலும் எனக்கும் ஈஸ்வருக்கும் திருமணம் ஆனது குறித்தே கேட்கிறார்கள் என்று சொன்னார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் ஷகிலா, அதான் பொறுப்பு துறப்பு போட்டு தானே வீடியோ பதிவிட்டாய், அப்புறம் என்ன மயித்துக்கு இங்க வந்து பேசுற என்று கூறி, இதுபோல ஆளுங்க எல்லாம் எதற்கு நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வர்றீர்கள் என்று கோபமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனாலும், திவ்யா தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வாய மூடுமா எழுந்து வெளியே போ! எதுக்கு நேரத்தை வீணடிக்கிறாய் என்று கேட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement