தயாரிப்பாளரிடம் காதல் கடிதத்தை கொடுத்தேன், ஆனால்.! நடிகை ஷகீலா கொடுத்த ஷாக்.!

0
1199
- Advertisement -

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர்,45 வயதாகும் இவர் 28 வயதுள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு செய்திகள் உலா வந்தது.

-விளம்பரம்-

மற்ற நடிகைகளைப் போல நடிகை சகிலாவின் வாழ்விலும் அவரு காதல் கதை இருக்கிறது அதனை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன்.

இதையும் படியுங்க : தற்கொலைக்கு முயன்ற இளம் ஷகீலா பட நடிகை.! வறுமையின் சோகம்.! 

- Advertisement -

நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த ‘சோட்டா மும்பை’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தை மணியன்பிள்ள ரஜூ தான் தயாரித்து இருந்தார். அந்த சமயத்தில் என் தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. என் தாயின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. இதனால் மணியன்பிள்ள ராஜுவிடம் அந்த படத்தில் நான் நடிப்பதற்கான முழு சம்பளத்தையும் முன்கூட்டியே கேட்டு என்று கேட்டிருந்தேன்.

மணியன்பிள்ள ராஜு:

-விளம்பரம்-

என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவரும் எனக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை அந்த படம் முடிவதற்குள்ளாகவே கொடுத்து விட்டார் அந்த சமயம் அந்த பணம் என் தாயின் சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த காரணத்தால் அந்த படத்தில் நடித்த போது ஒரு கட்டத்தில் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இதனால் அவரிடம் நான் காதல் கடிதத்தை கொடுத்தேன். ஆனால், கடைசி வரை அந்த கடிதத்திற்கான பதிலை அவர் சொல்லவே இல்லை’ என்று கூறியுள்ளார் ஷகிலா

Advertisement