சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.
இதையும் பாருங்க : விடுதலை சிறுத்தைகள் குறித்து நான் அப்படி சொல்லவே இல்ல – பதறியடித்து அனிதா சம்பத் விளக்கம்.
என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் Vj பார்வதியின் பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலாவிடம், கமன்ட்டில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் நியாயப் படுத்திக் கொள்ளலாம் ஆனால் பணத்திற்காக நீங்கள் செய்தது தவறுதான் நீங்கள் நிறுத்தி இருக்க வேண்டும் என்று கூறுகிறயதாய் பார்வதி படித்துக் காட்டினார்.
இந்த கேள்வியால் கடுப்பான ஷகிலா உனக்கு என்ன பிரச்சனை நீ எனக்கு பணம் தர போகிறாயா நான் வாழ வேண்டும் நான் தான் ஒரு குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு உதவி செய்வார்கள் இது என்னுடைய உடல் அதை நான் காட்டினேன் அதுவும் என்னுடைய மற்றவர்களை காப்பாற்றுவதற்காக என்னுடைய சம்மதத்துடன் தான் அதை செய்தேன் என்று நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார்