என்னது, மிளாவிற்கு மறைந்த நடிகர் விவேக் இப்படி ஒரு உறவினராம் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.

0
362
Mila
- Advertisement -

தனக்கும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இருக்கும் உறவு குறித்து ஷகிலாவின் தத்து மகள் மிளா கூறி இருக்கிறார். மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

இதையும் பாருங்க : வெற்றி’ என்ற வார்த்தைக்கு பதில் வேறு வார்த்தைதையை குறிப்பிட்ட வாழ்த்து சொன்ன niroop – பாலாவின் Thug பதில்.

- Advertisement -

ஷகிலாவின் தத்து மகள் மிளா :

அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் ஷகிலாவுடன் தான் வாழ்ந்து வருகிறார்.

பெண்ணாக மாற காரணம் :

மிளாவின் உண்மையான பெயர் ஹிஷாம். துபாயை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இவருடன் படித்த ஒரு பாக்கிஸ்தான் பையனுக்காக பெயில் ஆனாராம். அப்போது தான் ஒரு பையனுக்காக நாம் ஏன் இதை செய்கிறோம் என்று உணர்ந்து தன்னுள் பெண்ணை இருப்பதை உணர்ந்து பெண்ணாக மாறினாராம். அதே போல இவர் லாஸ் வேகாஸ் செல்லும் போது ஒரு பையனை டேட்டிங் செய்தாராம். அவர் கொடுத்த ரூபாய் நோட்டை பத்திரமாக இன்னும் வைத்துள்ளார்.

-விளம்பரம்-

விவேக்கின் உறவினர் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிளா, தான் விவேக்கின் உறவினர் என்பது கூறியுள்ளார். அந்த பேட்டியில் மீடியா துறைக்கு வந்தது எப்படி என்று கூறிய மிளா, தனக்கு விமானத்தில் பணி புரிய தான் ஆசை என்றும், தன்னுடைய மாமா விவேக் மற்றும் உறவினர் அழகு ஆகியர்களால் தான் மீடியா துறையில் ஆசை வந்தது என்றும் கூறி பெரும் ஷாக்கை கொடுத்து இருக்கிறார்.

Stunt Actor Azhagu Shares His Experience With Rajinikanth

ஸ்டன்ட் மாஸ்டர் அழகு :

விவேக்கை பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், ஸ்டண்ட் மாஸ்டர் அழகு பற்றி பலருக்கும் தெரியாது. தமிழ் சினிமாவில் சவால்களைத் தாண்டி சில ஸ்டன்டு கலைஞர்கள் மட்டுமே, நடிகர்களாகவும் ஜொலித்திருக்கிறார்கள். அப்படி, சண்டைக் கலைஞராக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக ஓர் இடத்தைத் தக்கவைத்திருக்கிறார் அழகு. சிவாஜி, ரஜினி, கமல், மோகன்லால், அமிதாப் பச்சன் என இந்தியாவின் உச்ச நடிகர்களுடன் பணியாற்றியவர். 70 வயதைக் கடந்த அழகு, தற்போது `நாம் இருவர் நமக்கு இருவர்’ எனும் சீரியலில் குஸ்தி டாடியாகக் கலக்கிவருகிறார்.

Advertisement