தலைக்கு ஹோட்டலில் இருந்து பார்சலா.!வைரலாகும் ஷாலினி மற்றும் அனோஷ்காவின் புகைப்படம்.!

0
766
Ajith-Daughter

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஷாலினிக்கு ஆத்விக் என்ற மகனும் அனோஷ்கா என்ற மகளும் இருப்பது தெரியும். இவர்கள் இருவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகிவந்த வண்ணம் இருக்கிறது.

பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.

இதையும் படியுங்க : கார் வேணும்னு அடம்பிடித்த ஆத்விக், அதட்டிய அஜித் மனைவி.! வைரலாகும் க்யூட் வீடியோ.! 

சில நாட்களுக்கு முன்னர் தனது மகளின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் நடித்து கொண்டிருக்கும் ‘விசுவாசம்’ பட கெட்டபில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அதே போல ஷாலினி மற்றும் ஆத்விக் ஷாப்பிங் சென்ற வீடியோவும் படு வைரலானது.

அந்த வகையில் சமீபத்தில் ஷாலினி மற்றும் அனோஷ்காவின் புகைப்படம் ஒன்றி படு வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஷாலினி கையில் உணவு பார்சலுடன் நின்று கொண்டிருக்கிறார்.