கோட் ஷூட்டில் அஜித், படு மாடர்ன் உடையில் ஷாலினி – வெளியான பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.

0
1068
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்து அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார். ஷாலினி, அஜித் குமார் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும், திருமணம் முடிந்து இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : 5 துப்பாக்கி ஏந்திய போலீஸ் சூர்யாவை காப்பாத்திடுவாங்களா – காடு வெட்டி குரு குடும்பத்தில் வரும் மிரட்டல். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை ஷாலினி, இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷாலினியின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் கோட் ஷூட்டில் அஜித்தும், ஷாலினி மிகவும் மாடர்ன் உடையிலும் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஷாலினியின் பிறந்தநாளை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் கொண்டாடினர் அஜித்.இந்த பிறந்தநாளில் ஷாலினிக்கு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்று நடிகர் அஜித் ,ஷாலினியின் தாய் தந்தையரை சந்தித்து பள்ளிப்பருவத்தில் ஷாலினிக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் யார் யார் என்பதை அறிந்து கொண்டு அவர்களை மட்டும் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அழைப்பை விடுக்க சொல்லியிருக்கிறார். இந்த பிறந்தநாளுக்கு ஷாலினிக்கு என்ன சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement