5 துப்பாக்கி ஏந்திய போலீஸ் சூர்யாவை காப்பாத்திடுவாங்களா – காடு வெட்டி குரு குடும்பத்தில் வரும் மிரட்டல். வைரலாகும் வீடியோ.

0
686
jaibhim
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையில் அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது.

-விளம்பரம்-

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் பல்வேரு வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்புகளை தெரிவித்து வருகிறது.

இதையும் பாருங்க : Transparent உடையில் மழையில் ரீல்ஸ், அப்பட்டமாக தெரிந்த உள்ளாடை – ராஜா ராணி மயிலா இது.

- Advertisement -

சூர்யாவிற்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 5 போலீஸ் சூர்யாவை காப்பாற்றிவிட முடியாது என்று காடு வெட்டி குருவின் மகன் பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில் பேசியுள்ள கனலரசன் , சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த சமுதாய மக்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். பழைய மாதிரி இருந்தால், வீட்டின் முன்பு ஒரு பத்தாயிரம் பேர் நின்றால் 5 துப்பாக்கி ஏந்திய போலீசாரால் சூர்யாவையும் காப்பாற்றிவிட முடியாது.அதனால் இந்த மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள் என்பதால் அவர் பதிலுக்கு தன்மையாக ஒரு பதில் கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள். அதில் என்ன என்ன தன்மையான பதில் இருக்கிறது.

-விளம்பரம்-

பேர் அரசியல் செய்யாதீர்கள் என்று சொல்பவர்கள், வேற ஒரு பெயரை வைத்து எடுத்து இருக்கலாமே, அதேபோல அந்த இடத்தில் காலண்டர் அவசியம் இல்லையே. சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இதற்குப் பிறகு சூர்யா எந்த படத்தையும் எடுக்கவும் முடியாது வெளியிடவும் முடியாது. அதே போல ஞானவேலும் சரி, அவர் வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியாது. மாவீரன் மஞ்சள் படை சார்பாக எங்களுடைய வன்னிய சமுதாயம் அனைவரும் இதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement