ஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் தங்கையாக நடிக்க மறுத்துள்ள ஷாலினி ? காரணம் இதான். (அதுவும் இன்னா படம் இது)

0
4579
shalini
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
20 years of Padayappa - Check out these super cool facts about superhit! -  Suryan FM

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான். ஆனால், இவர் கதாநாயகியாக மாறிய பின்னர் இவருக்கு மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

இதையும் பாருங்க : நயன்தாரா பையா படத்தில் நடிக்க மறுத்த காரணம் இது தான். லிங்குசாமி சொன்ன தகவல். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதில் ரஜினியின் தங்கையாக நடித்த சித்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஷாலினிக்கு வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால், அப்போது ஷாலினி நாயகியாக வர கவனம் செயல்தியதால் அந்த ரோலைநிராகரித்துவிட்டார் ஷாலினி. அதேபோல், ‘நீலாம்பரி’ கேரக்டருக்கு முதலில் பிரபல நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருக்கின்றனர். ஆனால், வேறு ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனாவை சந்தித்த கே.எஸ். ரவிக்குமார், இதில் வரும் நெகட்டிவ் கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று ரஜினியிடம் சொன்னாராம். அதன் பிறகு நடிகை நக்மாவின் பெயர் பரிசீலனையில் இருந்ததாம். பின், தனது தோழியான ரம்யாகிருஷ்ணனை அந்த ‘நீலாம்பரி’ கேரக்டரில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

-விளம்பரம்-
Advertisement