வலிமை படத்துக்கு பின் பீஸ்ட் படத்தை பார்க்க வந்த ஷாலினி. அதுவும் எந்த தியேட்டர் ? கூட யார் வந்திருக்காங்க ?

0
570
Shalini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக அந்த மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய் மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

பீஸ்ட் படம் குறித்த தகவல்:

பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன் வெளியான கேஜிஎஃப் 2 படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பீஸ்ட் படம் ஏமாற்றம் தான். மேலும், விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தை பார்த்த ஷாலினி:

முதல் நாள் வசூலில் முந்தைய படங்களின் சாதனையை பீஸ்ட் முறியடித்து முந்தைய கூறப்படுகிறது. மேலும், அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல படங்களின் வசூல் சாதனை வெறும் மூன்று நாட்களிலேயே விஜய்யின் பீஸ்ட் படம் முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜீத்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோர் பீஸ்ட் படத்தை பார்த்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பீஸ்ட் படத்தை பார்த்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

விஜய்-ஷாலினி நடித்த படங்கள்:

தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், விஜய் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு 2000 ஆண்டு வெளிவந்த கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

அதுமட்டுமில்லாமல் அஜித் அவர்கள் தற்போது ஹைதராபாத்தில் தனது அடுத்த படத்தின் சூட்டிங்கில் பிஸியாக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தான் அஜித்தின் வலிமை வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement