வலிமை படம் பார்க்க வந்த ஷாலினி இடம் ரசிகர் ஒருவர் வைத்த கோரிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் ரிலீசானது. இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார்.
இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஏகே 61 படம் பற்றிய தகவல்:
மேலும், வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
ஏகே 61 படத்தின் ஷூட்டிங் தேதி:
அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் இந்த படத்தையும் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள்.
ஏகே 61 படத்தின் தலைப்பு:
சமீபத்தில் அஜித்தின் ஏகே 61 படம் குறித்து இயக்குனர் வினோத், படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே அஜித் தான் என்று கூறியிருக்கிறார். உடனே அஜித்திற்கு இரட்டை வேடமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு வினோத் இப்போதைக்கு சொல்லமுடியாது என்று பதிலளித்துள்ளார். இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் பற்றிய அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் டைட்டிலை வல்லமை என்ற வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே அஜித்தின் திரைப்படங்கள் V சென்டிமென்டில் வந்துகொண்டிருக்கின்றது.
ஷாலினியிடம் ரசிகர் கேட்ட கேள்வி:
அதே வரிசையில் தற்போது வல்லமை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாலினி அஜித் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், வலிமை படத்தை அஜித் மனைவி ஷாலினி தனது குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்துள்ளார். அவர் படம் முடிந்து வெளிவரும் போது வீடியோ எடுத்த ரசிகர் ஒருவர், ‘ஹாய் மேடம், அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க’? என உற்சாகத்தில் கூறியிருக்கிறார். உடனே, சாலினி அவரை பார்த்து ஓகே என்பது போல கையை காட்டுகிறார். இந்த வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.