தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடோடிகள் படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் காதல் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் தங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
மணிகண்டன் தன்னை காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி கூறியிருந்தார் மேலும் ஐந்து வருடங்களாக மணிகண்டன் வாழ்ந்துவந்த தான் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் சாந்தினி கூறி இருந்தார்.
ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு தன்னுடைய ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனோ, சாந்தினியை தனக்கு யார் என்றே தெரியாது அவரை வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தண்னிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாக கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலு சம்மு இந்த விவாகரத்தில் யாருக்கு நியாயம் கிடைக்கும் என்று கேட்டு இருக்கிறார். நடிகை ஷாலு ஷம்முவும், சாந்தினியும் நெருங்கிய தோழிகள் என்பது கூறிப்படதக்கது. இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் ஷாலு ஷம்முவிடம், ஷாந்தினி பண்ணது தப்புன்னு ஒதுக்குறீங்களா ? என்று கேட்டதர்க்கு, மற்றவர்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க நான் யார். தங்களுக்கு வேண்டியதற்க்காக போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.