இவரு போய் அந்நியனா ? ஷங்கரின் பாலிவுட் ரீ-மேக்கால் கடுப்பான விக்ரம் ரசிகர்கள்.

0
28544
anniyan
- Advertisement -

இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரமுடன் ‘அந்நியன், ஐ’ என இரண்டு மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார். இதில் ‘அந்நியன்’ திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம் ‘அம்பி – ரெமோ – அந்நியன்’ என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.

-விளம்பரம்-

இதில் ‘சீயான்’ விக்ரமுக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நெடுமுடி வேணு, நாசர், சார்லி ஆகியோர் நடித்திருந்தனர். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 2005-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீ -மேக் செய்ய உள்ளதாக சமீப காலமாக கூறப்பட்டு வந்தது. மேலும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அதிகரபூர்வ அறிவிப்பை இன்று வெளியுள்ளார் ஷங்கர். மேலும், இந்த படத்தில் ரன்வீர் சிங் தான் நடிக்கிறார் என்பதை புகைப்படத்தோடு உறுதி செய்துள்ளார் ஷங்கர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷங்கர், ”அந்நியனை இந்தியில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற திறமையான, கவர்ந்திழுக்கக் கூடிய ஒருவர் தேவை. அது ரன்வீர் சிங்கிடம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். காரணம் தனது அற்புதமான நடிப்பின் மூலம் இரு பாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர் ரன்வீர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இந்த சக்திவாய்ந்த கதை அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஷங்கரின் இந்த அறிவிப்பை அடுத்து பலரும் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் இந்த படத்தில் விக்ரமை தவிர வேறு யாரும் சிறப்பாக பண்ண முடியாது என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஷங்கருக்கு கதை எழுதும் திறன் குறைந்துவிட்டதால் தான் அவர் தொடர்ந்து பழைய படங்களை தூசி தட்டி வருகிறார் என்றும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Advertisement