மீண்டும் ஒரு உதவியாளரை இழந்த சங்கர். விபத்தில் உயிரிழந்த இளம் இயக்குனர்.

0
4029
Shankar

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில்கடந்த பிப்ரவரி 19 இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 3 படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், எடை தாங்காமல், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் துணை இயக்குனரும், கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனுமான கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் பலியாயினர். 10 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பிரச்னையில் கமல் மற்றும் ஷங்கர் உட்பட பலரிடம் விசாரணையும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது மீண்டும் சங்கரின் உதவி இயக்குனர் ஒருவர் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் A V அருண் பிரசாத் இவர் தமிழில் வெங்கட் பர்கர் என்ற பெயரால் அறியப்பட்டவர். இவர் ஷங்கரின் ஐ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவாகவும் அறிமுகமாவதாக இருந்தது. இந்த நிலையில் இவர், இன்று (மே 15) காலை கோயம்பத்தூரில் பைக் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று காலை பைக்கில் சென்று கொண்டு இருந்த போது லாரி மீது அருண் பிரசாத்தின் பைக் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement