இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த பெருமைக்குரிய பட்டம் – என்ன தெரியுமா ?வைரல் புகைப்படங்கள்

0
1359
shankar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கிடைத்த பட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே இயக்குனர் சங்கரின் மகள் அதிதிசங்கர் டாக்டர் படிப்பை படித்து முடித்து உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை அடுத்து தற்போது அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிதி சங்கருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தான் பட்டம் வாங்கிய புகைப்படத்தையும், தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அதிதி சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிதி சங்கருக்கு வாழ்த்து மழையை குவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் தற்போது இந்த புகைப்படத்தை ரசிகர்களும், நெட்டிசன்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement